இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத  ஸ்டேட் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது, இந்த புதிய விதிகள் டிசம்பர் 13ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எஸ்பிஐ வங்கி அதன் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 6.75 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களின் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிக்கு 7.25 சதவீத வட்டியையும் வழங்குகிறது.  தற்போது வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகளின் மூலமாக நீங்கள் உங்களது முதலீட்டை இரட்டிப்படைய செய்யலாம்.  விதி 72ன் ஆனது வருடாந்திர வருவாய் விகிதத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தேவையான ஆண்டுகளின் எண்ணிக்கையை மதிப்பிட உதவுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு?


சமீபத்திய வட்டி விகிதத்தை 72 ஆல் வகுப்பதன் மூலம் உங்கள் முதலீடு எந்த நேரத்தில் இரட்டிப்பாகும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.  உதாரணமாக உங்கள் வருமான விகிதம் 9% எனில், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க எடுக்கும் ஆண்டுகளின் எண்ணிக்கை 72/9= 8 ஆண்டுகள் ஆகும்.  இப்போது விதி 72ன் படி, எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில், வழக்கமான வாடிக்கையாளரின் பணம் சுமார் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் (72/6.75 = 10.6).  விதி 72ன் படி, எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்களின் பணம் சுமார் 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் (72/7.25 = 9.9).



கனரா வங்கியானது 666 நாட்களுக்ககான எஃப்டிக்கு  7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.  பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியையும், மூத்த குடிமக்களின் எஃப்டிக்கு 7.5% வட்டியையும் வழங்குகிறது. உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 700 நாட்களுக்கான எஃப்டிக்கு 8.50 சதவீதம் வரை வட்டி விகிதத்தை  வழங்குகிறது.  ஆர்பிஎல் வங்கி 725 நாட்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.  இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.  யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 599 நாட்களுக்கு எஃப்டிகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.  மேலும் ஐடிஎஃப்சி வங்கி 750 நாள் எஃப்டிகளுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டியை வழங்குகிறது.


மேலும் படிக்க: இலவச அரிசி-கோதுமை வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ