ஒரே ஒரு முறை டெபாசிட்! ரூ. 21 லட்சம் வரை லாபம்! எஸ்பிஐ அசத்தல் திட்டம்!
எஸ்பிஐயின் எஃப்டி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர்களை விட நிலையான வைப்புத்தொகைக்கு அரை சதவீதம் (0.50%) அதிக வட்டி கிடைக்கும்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் நிலையான வருமானத்தை பெறுவதற்காக பலரும் ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இருப்பினும் ஓய்வுக்குப் பிறகு, எந்தவொரு பொதுவான முதலீட்டாளரும் தனது பணத்தைப் பற்றி எந்தவிதமான ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. மூத்த குடிமக்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், பணம் சம்பாதிப்பதற்கான விருப்பங்கள் அனைவரிடத்திலும் இருந்துகொண்டு தான் இருக்கின்றது. மூத்த குடிமக்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாத வருமானத்திற்காக பல வங்கிகளில் அரசாங்கம் வழங்கும் திட்டங்களில் டெபாசிட் செய்து வருகின்றனர். பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மூத்த குடிமக்கள் கால வைப்புத் திட்டம் மூத்த குடிமக்களின் எதிர்கால வருமானத்திற்கு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. எஸ்பிஐயின் மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக உள்ளது.
எஸ்பிஐயின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, மூத்த குடிமக்கள் எஸ்பிஐயின் எஃப்டி திட்டத்தில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம். பொதுவாக, மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர்களை விட நிலையான வைப்புத்தொகைக்கு அரை சதவீதம் (0.50%) அதிக வட்டி கிடைக்கும். அடுத்ததாக மூத்த குடிமக்களின் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 1% கூடுதல் வட்டி கிடைக்கும். வழக்கமான வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 6.5 சதவீத வருடாந்திர வட்டியைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீத வருடாந்திர வட்டியை வழங்குகிறது. உண்மையில், மூத்த குடிமக்கள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளில் எஸ்பிஐ வீ-கேர் டெபாசிட் திட்டத்தின் கீழ் கூடுதலாக அரை சதவீத பிரீமியம் வட்டியைப் பெறுகிறார்கள்.
எஸ்பிஐயின் 10 வருட முதிர்வு திட்டத்தில் ஒரு மூத்த குடிமகன் ரூ.10 லட்சத்தை மொத்தமாக டெபாசிட் செய்கிறார் எனில், அந்த முதலீட்டாளர் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.21,02,349 தொகையை பெறுவார். இதில் வட்டி மூலம் ரூ.11,02,349 நிலையான வருமானம் கிடைக்கும். எஸ்பிஐ வங்கி பிப்ரவரி 15,2023 முதல் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னர் டிசம்பர் 13, 2022 அன்று எஸ்பிஐ எஃப்டி மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியது. 5 வருட வரி சேமிப்பு எஃப்டிக்கு 80C பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், எஃப்டி-ல் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். வருமான வரி விதிகளின்படி, மூலத்தில் வரி விலக்கு (டிடிஎஸ்) எஃப்டி திட்டத்தில் பொருந்தும். தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, வரி விலக்கிலிருந்து விலக்கு பெற வைப்பாளர் படிவம் 15G/15H-ஐ சமர்ப்பிக்கலாம்.
மேலும், கடந்த சில நாள்களாக, புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்குமாறு, வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து செய்திகளை அனுப்பி வருகின்றன. லாக்கர் குறித்து எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்ட தகவலில்,"திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் தீர்வு காண தயவுசெய்து உங்கள் வங்கி கிளை அணுகவும். நீங்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், நீங்கள் இன்னும் துணை ஒப்பந்தத்தையும் செயல்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. இது தவிர, பாங்க் ஆப் பரோடாவும் தனது வாடிக்கையாளர்களை திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் உரிய தேதிக்குள் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறது.
மேலும் படிக்க | விரைவில் இந்திய சந்தையை கலக்க வரவுள்ள டாடா கார்கள்: முழு பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ