ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் போதும்... மாதம் ரூ. 70 ஆயிரம் வரை கிடைக்கும் - அது எப்படி?

SBI ATM Franchise: எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை பெற ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 27, 2023, 06:55 PM IST
  • வங்கி ஏடிஎம் உரிமத்தை பெற அதிகாரப்பூர்வ இணையதளம் வழி அணுக வேண்டும்.
  • இல்லையென்றால், மோசடிக்காரர்களின் வலைக்குள் சிக்கும் ஆபத்தும் உள்ளது.
  • இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க பல நிபந்தனைகளும் உள்ளன.
ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் போதும்... மாதம் ரூ. 70 ஆயிரம் வரை கிடைக்கும் - அது எப்படி? title=

SBI ATM Franchise: ஒருவர் பெரும் முதலீட்டை செய்து ஒரு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி, அதில் வருமானம் பெறுவது என்பது எளிதானது அல்ல. அதற்கு நேரமும், அதிக முயற்சிகளும் தேவை எனலாம். ஆனால் ரூ.5 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.60 முதல் ரூ. 70 ஆயிரம் வரை நீங்கள் சம்பாதிக்கலாம் என்று யாராவது சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?.

அத்தகைய வாய்ப்பை நீங்கள் இழக்க விரும்புவதில்லை என்றால் இதனை தொடர்ந்து படியுங்கள். மாதம் ரூ. 70 ஆயிரம் வரை சம்பாதிக்க எதில் முதலீடு செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், உங்களுக்கான பதில், எஸ்பிஐ ஏடிஎம் உரிமம் என்பதுதான் பதிலாக இருக்கும். அதாவது, எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மை அமைக்க முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மாதந்தோறும் வருவாய் ஈட்டலாம். 

ஒப்பந்தம் அடிப்படையில்...

வங்கியே ஏடிஎம்மை நிறுவுகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அப்படி இல்லை. உண்மையில், ஏடிஎம் நிறுவும் வேலை வங்கி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்கிறது. இந்த பணியை வங்கியின் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பல்வேறு இடங்களில் செய்து வருகின்றனர். ஏடிஎம் நிறுவலுக்காக எஸ்பிஐ டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் ஆகியவற்றுடன் கைக்கோர்த்துள்ளது.

மேலும் படிக்க | SBI லாக்கர் புதிய விதிகள்... வாடிக்கையாளர்கள் இதை உடனே செய்யுங்கள்!

அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்

நீங்களும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சென்று பார்வையிட வேண்டும். இந்த பணியில் விழிப்புடன் இருப்பது மிக மிக அவசியம், எந்த ஒரு விண்ணப்பத்தையும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்ய ஏனெனில் இந்த பணியில் பல மோசடி வழக்குகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விண்ணப்ப நிபந்தனை

ஏடிஎம் அறைக்கு 50 முதல் 80 சதுர அடி இடம் இருக்க வேண்டும். மேலும், மற்றொரு ஏடிஎம்மில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நீங்கள் அமைக்க உள்ள ஏடிஎம் இருக்க வேண்டும். மேலும், இந்த இடம் மக்களின் பார்வையில் எளிதில் படும் இடத்தில் இருக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இங்கு சரியான வெளிச்சம் இருக்க வேண்டும். மேலும், 1KW மின் இணைப்பும் அவசியம். கேபின், கான்கிரீட் கூரை மற்றும் சிமென்ட் சுவர்கள் இருப்பது அவசியம். அங்கு ஏடிஎம் வைக்க உங்கள் பகுதியின் நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். 

தேவையான ஆவணங்கள்

ஆதார், பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, மின்சார பில், வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக், புகைப்படம், மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண், ஜிஎஸ்டி எண், நிறுவனத்தால் கோரப்பட்ட நிதி ஆவணங்கள் உள்ளிட்டவை தேவைப்படும். 

கிடைக்கும் வருவாய்

ஏடிஎம் உரிமையைத் தொடங்க நீங்கள் ரூ. 2 லட்சம் பாதுகாப்பு டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும் மற்றும் ரூ. 3 லட்சம் செயல்பாட்டு மூலதனம் தேவைப்படும். இந்த முதலீட்டைச் செய்த பிறகு, ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் வங்கி உங்களுக்கு ரூ.8 மற்றும் இருப்பு காசோலை மற்றும் நிதி பரிமாற்றம் போன்ற ஒவ்வொரு பணமில்லா பரிவர்த்தனைக்கும் ரூ. 2 சம்பாதிக்கலாம்.  இதன்மூலம், மாதம் ரூ.60 முதல் ரூ. 70 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க | Indian Railways: இனி இவங்களுக்குதான் லோயர் பர்த்.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News