SBI vs Post Office: பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என அனைவரும் நினைப்பதுண்டு. அதற்கான பல வழிகள் இருப்பதால், இதில் எப்போதும் மக்களுக்கு ஒரு சந்தெகம் இருந்துகொண்டே இருக்கும். நீங்களும் உங்கள் பணத்தைச் சேமிக்க விரும்பினால், இந்த பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் ஒரு லாபகரமான அரசாங்கத் திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளாலாம். இதில் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை ஈட்டலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ, தபால் நிலையம் போன்றவை சேமிப்புத் திட்டத்துக்கான சிறந்த இடங்களாக பார்க்கப்படுகின்றன. ஆனால், பல சமயங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முதலீடு செய்வதா அல்லது எஸ்பிஐ-இல் முதலீடு செய்வதா என்ற குழப்பம் நம் மனதில் தோன்றுவது வழக்கம். எனினும், இனி உங்களுக்கு அந்த குழப்பம் வேண்டாம். எங்கு முதலீடு செய்தால் அதிக லாப கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


SBI FD விகிதங்கள்


நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத் தொகையை வழங்குகிறது. எஸ்பிஐ எஃப்டி வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 13 அன்று, வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்தது. அதன் பிறகு வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களில் 2.90 சதவீதம் முதல் 5.65 சதவீதம் வரை வட்டி பெறுகிறார்கள். அதே சமயம், மூத்த குடிமக்களுக்கு 3.4 சதவீதம் முதல் 6.45 சதவீதம் வரை வட்டியில் பலன் கிடைக்கும். 


தபால் துறையும் பெரிய பலன்களைத் தருகிறது


தபால் நிலையமும் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை செய்து தருகிறது. போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டிகளைப் பற்றி பேசுகையில், 2 ஆண்டுகளுக்கான எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்கள் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள் இதில் 5.7 சதவிகிதம் மற்றும் 3 வருட FD இல் 5.8 சதவிகிதம் பலன்களைப் பெறுகிறார்கள். 5 ஆண்டு கால வைப்புத் தொகையைப் பற்றி பேசினால், வாடிக்கையாளர்களுக்கு 6.7 சதவீதம் என்ற விகிதத்தில் பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | இந்த தொகை வரை UPI இல் RuPay கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை 


கிசான் விகாஸ் பத்ராவில் எவ்வளவு கிடைக்கும்


கிசான் விகாஸ் பத்திராவின் இரண்டு கால அளவுகளிலும் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது கிசான் விகாஸ் பத்ரா 123 மாத டெபாசிட்டுகளுக்கு 7% வட்டி அளிக்கப்படும். கிசான் விகாஸ் பத்ராவின் 124 மாத டெபாசிட்டுகளுக்கு 6.9% வட்டி கிடைக்கும். 


இந்த மூன்று டெபாசிட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மற்ற இரண்டையும் விட தபால் அலுவலக FD மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது.


தபால் அலுவலகத்தில் அதிக பலன் கிடைக்கும்


இந்தத் திட்டங்கள் அனைத்திலும் பெறப்பட்ட வட்டியை ஒப்பிட்டுப் பார்த்தால், முதலீட்டாளர்கள் அஞ்சலக FD-யில் அதிக பலன்களைப் பெறுவார்கள் என்பது தெளிவாகிறது. அதாவது, தற்போதைய விகிதங்களைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் தபால் அலுவலகத்தில் பணத்தை முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும். 


மேலும் படிக்க | குழந்தைகள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கினால் அரசு கொடுக்கும் சலுகை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ