SBI Alert: இதை செய்யவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும் என SBI எச்சரிக்கை
SBI கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கணக்கின் KYC-ஐ தாமதமின்றி புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். KYC ஐ புதுப்பிக்காதவர்களின் வங்கி சேவைகள் நிறுத்தப்படும் என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கணக்கின் KYC-ஐ தாமதமின்றி புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். KYC ஐ புதுப்பிக்காதவர்களின் வங்கி சேவைகள் நிறுத்தப்படும் என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
மே 31 க்குப் பிறகு கணக்குகள் முடங்கும்
இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்ட SBI, 'வாடிக்கையாளர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் வங்கி சேவைகளைத் தொடர 31 மே 2021 க்குள் KYC ஐ புதுப்பிக்க வேண்டும். இதற்காக, வாடிக்கையாளர்கள் தங்கள் KYC ஆவணத்தை எடுத்துக்கொண்டு, அவர்களது கிளை (Home Branch) அல்லது அவர்கள் அருகிலுள்ள கிளைக்கு செல்லலாம். கொரோனா காரணமாக, இந்த வசதியை மே 31 வரை நீட்டித்துள்ளோம். இதற்குப் பிறகு, KYC புதுப்பிக்கப்படாத கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகள் முடக்கப்படும்' என்று SBI கூறியுள்ளது.
ALSO READ: SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: இனி பண பரிமாற்றத்திற்கு இது கண்டிப்பாகத் தேவை
வீட்டில் இருந்தபடியே KYC -ஐ புதுப்பிக்கலாம்
இந்த கொரோனா தொற்றுநோயால் (Coronavirus) வங்கிக்கு செல்ல தயக்கம் காட்டுபவர்களுக்காக, SBI தபால் அல்லது மின்னஞ்சல் விருப்பத்தையும் வைத்திருக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் KYC தொடர்பான ஆவணங்களை வங்கிக்குச் செல்லாமல் இவற்றின் மூலம் அனுப்பலாம். இப்படி செய்யும்போது, KYC புதுப்பிக்கப்பட்டவுடன், வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பப்பப்பட்டு அறிவிக்கப்படும்.
ALSO READ: SBI Alert: இந்த தவறை செய்தால் மொத்த பணமும் காலி, QR Code scan பற்றி எச்சரித்தது SBI
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR