வோடபோன் ஐடியாவின் 5% பங்குகளை வாங்க Google திட்டமிட்டுள்ளது...
வோடபோன் ஐடியாவில் ஐந்து சதவீத பங்குகளை வாங்க சுந்தர் பிச்சய் தலைமையிலான சர்ச் என்ஜின் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது.
வோடபோன் ஐடியாவில் ஐந்து சதவீத பங்குகளை வாங்க சுந்தர் பிச்சய் தலைமையிலான சர்ச் என்ஜின் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ இயங்குதளத்தில் ரூ.43.574 கோடியை முதலீடு செய்து பேஸ்புக் 9.99 சதவீத பங்குகளை வாங்கிய பின்னர் இந்த நிறுவனம் தற்போது இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது.
வோடபோன் ஐடியாவில் கூகிள் ஐந்து சதவீத பங்குகளை வாங்கினால், கடனில் மூழ்கியிருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு நிதி ரீதியாக பெரிய நிவாரணம் கிடைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஊடக தகவல்கள் படி இந்த நிறுவனத்தின் பேச்சுவார்த்தைகள் மிக ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன. எனவே இந்த ஒப்பதம் குறித்து எதுவும் தற்போதைக்கு உறுதியாகக் கூற இயலாது.
READ | ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, தினமும் 2GB தரவு இலவசம்...
இருப்பினும், வோடபோன் மற்றும் கூகிள் இந்த அறிக்கைக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்களின் நெருங்கிய வட்டார தகவல்கள் படி, கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டும் ஜியோ இயங்குதளத்தின் பங்கை வாங்குவதற்கான போட்டியில் இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த திட்டம் தடைப்பட்டது.
இந்நிலையில் தற்போது கூகிள், வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்தால் பேஸ்புக்கோடு போட்டியிடலாம். மேலும் இந்தியாவில் பல வழிகளில் முதலீடு செய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..
READ | Vodafone-Idea பயனர்கள் இனி UPI பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம்: Paytm அறிவிப்பு...
இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக முழு அடைப்பு நடைமுறையில் உள்ளது. மேலும் இந்த ஊரடங்கு தரவுகளின் தேவையா அதிகரித்துள்ளது. பயன்பாட்டாளர்கள் முன்பை விட அதிக தரவை பயன்படுத்த முனைகின்றனர். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திகொண்டு தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கூகிள் கைகோர்க்க முடிவு செய்துள்ளது.
வோடபோன் ஐடியா AGR-க்கு ரூ.58000 கோடி கடன் நிலுவை உள்ளது. இந்நிறுவனம் இதுவரை 6854 கோடி ரூபாயைக் கட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கவில்லை என்றால் கட்டாயத்தின் பேரில் நிறுவனத்தை மூட வேண்டி இருக்கும் என ஆதித்யா பிர்லா முன்னதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மொழியாக்கம்: அரிஹரன்