இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமானது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.  ஒரு தனிநபரது ஆதார் அட்டையில் அவரது பெயர், முகவரி, வயது, பாலினம், தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவல்களும் கருவிழி, கைரேகை போன்ற முக்கியமான பயோமெட்ரிக் தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.  வங்கி கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற மற்ற அடையாள ஆவணங்களுடனும் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளது என்பதால் இதனை நாம் கவனமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.  ஒருவரது ஆதார் அட்டை மோசடிக்காரர்களின் கையில் கிடைத்துவிட்டால் அவ்வளவு தான், அவர்கள் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தக்கூடும்.  ஆதார் அட்டை பயன்படுத்துபவர்கள் இப்போது தங்கள் ஆதார் எண்களை எஸ்எம்எஸ் மூலம் லாக் செய்தும், அன்லாக் செய்தும் கொள்ளலாம், இதை நீங்கள் செய்தால் உங்கள் ஆதார் அட்டை விவரங்களை யாராலும் தவறாகப் பயன்படுத்த முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அடுத்த 15 நாட்களில் நல்ல செய்தி! 



ஆதார் கார்டை லாக் செய்யும் செயல்முறை மிகவும் எளிமையான ஒன்று.  ஒரு நபரின் ஆதார் அட்டை லாக் செய்யப்பட்ட பிறகு அந்த ஆதார் எண்ணை யாரும் பயன்படுத்த முடியாது மற்றும் அதன் மூலம் எந்தவித சரிபார்ப்பையும் மேற்கொள்ள முடியாது.  ஆதார் அட்டையை லாக் செய்த பிறகு ஏதேனும் சரிபார்ப்பு செயல்முறை செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் சரிபார்ப்பிற்கு விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷனை பயன்படுத்த வேண்டும்.  இந்த அமைப்பு உங்கள் ஆதார் அட்டைகளை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க உதவும்.  இப்போது விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷனை பயன்படுத்தி ஆதார் அட்டைகளை எப்படி லாக் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.


உங்கள் ஆதார் எண்ணை லாக் செய்ய செட் ஃபார்மட்டில் மெசேஜ் டைப் செய்ய வேண்டும்.  ஆதார் எண்ணின் கடைசி நான்கு எழுத்துக்களைத் தொடர்ந்து GETOTPLAST என்று டைப் செய்யவேண்டும்.  இப்போது உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்ய உங்கள் ஆதார் எண்ணின் 4 மற்றும் 8 எண்களைத் தொடர்ந்து LOCKUID என்று டைப் செய்திட வேண்டும்.  பின்னர் அதே எண்ணுக்கு நீங்கள் பெறப்பட்ட ஓடிபி-ஐ அனுப்ப வேண்டும், இதனை செய்த பிறகு உங்கள் ஆதார் எண்ணை யாரும் சரிபார்ப்பிற்குப் பயன்படுத்த முடியாது.  இந்த செயல்முறை முடிந்ததும் உங்கள் செயல்முறை வெற்றிபெற்றுவிட்டது என்பதற்கான செய்தியை பெறுவீர்கள்.


மேலும் படிக்க | 8th Pay Commission: காத்திருக்கும் குட் நியூஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் சம்பள உயர்வு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ