FD: 1001 நாட்களுக்கான முதலீட்டிற்கு 9.5% வட்டி... மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்...!
Senior Citizen FD Rates: பல வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, நல்ல வட்டியை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு என்று வரும்போது எப்போதுமே அவர்களுக்கான வட்டி விகிதம், மற்றவர்களை விட அதிகமாகவே இருக்கும்.
Senior Citizen FD Rates: சம்பாதிக்கும் அனைவருமே தங்கள் வருவாயில் ஒரு பகுதியை சேமித்து, அதனை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள். அதோடு முதலீடுக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அதற்கான சிறந்த தேர்வு நிலையான வைப்புத் தொகை என்னும் எப்டி திட்டங்கள் தான். நிலையான வைப்பு தொகை கணக்குகளை பொருத்தவரை, பல வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, நல்ல வட்டியை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு என்று வரும் போது எப்போதுமே அவர்களுக்கான வட்டி விகிதம், மற்றவர்களை விட அதிகமாகவே இருக்கும். மூத்த குடிமக்கள் பலர் வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் நிலையில், அதிக வட்டி விகிதம் அவர்களுக்கு பெரிய அளவில் நிவாரணத்தை தரும். அந்த வகையில் தற்போது பல வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. அது குறித்து விபரமாக அறிந்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கு 9.5 % வட்டி வழங்கும் யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி
பொதுவாகவே சிறு நிதி வங்கிகள் அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இந்நிலையில் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank) வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது. அதன் கீழ், வங்கியில் 1001 நாட்களுக்கு செய்யப்படும் எப்படி முதலீடுகளுக்கு 9.5% வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்காக இந்த சலுகை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மற்ற FD முதலீட்டு திட்டங்களுக்கு 9.25% வட்டி வழங்கப்படுகிறது. ஆறு மாதங்கள் முதல் 501 நாட்கள் வரையிலான FD முதலீட்டு திட்டங்களுக்கு 9.25% வட்டி கிடைக்கும். மேலும் 701 நாட்களுக்கான எப்படி கணக்குகளுக்கு 9.45% வட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | கை நிறைய பணம் சம்பாதிக்க அருமையான சலூன் பிசினஸ்... மாதம் லட்சங்களை அள்ளலாம்!
வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள HDFC வங்கி
நாட்டின் மிக முக்கிய தனியார் துறை வங்கியான HDFC வங்கியும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. முதலீட்டு காலம் மற்றும் தொகைக்கு ஏற்ப HDFC வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் 5% முதல் 7. 90 % என்ற அளவில் மாறுபடுகின்றன. மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் அதிகம் இருக்கும்.
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் பிற வங்கிகள்
மேலே கூறப்பட்டுள்ள வங்கிகள் மட்டுமல்லாது, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியும் (Punjab & Sindh Bank) மூத்த குடிமக்களுக்கான எஃப்டி முதலீட்டு (Investment Tips) கணக்குகள் மீதான வட்டியை அதிகரித்துள்ளது. தற்போது 444 நாட்களுக்கான நிலையான வைப்பு முதலீட்டு கணக்கிற்கு 8.10 % வரை வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் 2024 மார்ச் மாதம் 31ம் தேதி வரை முதலீடு செய்யலாம். அதே போன்று கரூர் வைசியா வங்கியும் (Karur Vysya Bank - KVB) மூத்த குடிமக்களுக்கான 444 நாட்களுக்கான எஃப்டி திட்டத்திற்கு அதிகபட்சமாக 8 சதவீத வட்டியை வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கியும் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இப்போது சாதாரண குடி மக்களுக்கு அதிகபட்சமாக 7.20 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.85% வட்டியும் கிடைக்கும்.
மேலும் படிக்க | World's TOP CEOs: எலான் மஸ்க், சுந்தர் பிச்சையை பின்னிக்குத் தள்ளிய முகேஷ் அம்பானி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ