Post Office RD: ரூ.5000 முதலீடு செய்து ரூ.8 லட்சம் வருமானம் கிடைக்கும் அசத்தல் திட்டம்

Post Office RD: 5 ஆண்டுகளுக்கு ஒரு தொடர் வைப்பு (Recurring Deposit) செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போது முன்பை விட அதிக வட்டி பெறலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2024, 09:57 PM IST
  • அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது.
  • 50 சதவீதம் வரை கடன் பெறலாம்.
  • 10 வருடங்களில் 8 லட்சத்துக்கும் மேல் ஈட்டலாம்.
Post Office RD: ரூ.5000 முதலீடு செய்து ரூ.8 லட்சம் வருமானம் கிடைக்கும் அசத்தல் திட்டம் title=

Post Office RD: அனைவரும் தங்கள் பணத்தை பாதுகாத்து பன்மடங்காக அதிகரிக்க விரும்புகிறார்கள். அதற்காக பல்வேறு திட்டங்களில் பணத்தை சேமிக்கிறார்கள், முதலீடு செய்கிறார்கள். பாதுகாப்பான முதலீட்டுடன் சிறந்த வருமானத்தை அளிக்கும் வகையில், தற்போது தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இவற்றில் ஒரு திட்டமாக உள்ள போஸ்ட் ஆபிஸ் ஆர்டி (Post Office RD) இப்போது மேலும் பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், அதன் வட்டி விகிதத்தை சமீபத்தில் அரசாங்கம் உயர்த்தியுள்ளதுதான். இந்தத் திட்டத்தில், வெறும் 10 மாதங்களில் ரூ.8 லட்சத்துக்கு மேல் நிதி திரட்ட முடியும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது

5 ஆண்டுகளுக்கு ஒரு தொடர் வைப்பு (Recurring Deposit) செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போது முன்பை விட அதிக வட்டி பெறலாம். செப்டம்பர் 29, 2023 அன்று மத்திய அரசு (Central Government) சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றியது. அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் புதிய கட்டணங்கள் பொருந்தும். நிதி அமைச்சகம் இப்போது தபால் அலுவலக RD (Post Office Recurring Deposit) மீதான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக 5 ஆண்டுகளுக்கு உயர்த்தியுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் இப்போது அதிக நிதியை திரட்ட முடியும். புதிய கட்டணங்கள் அக்டோபர் 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

50 சதவீதம் வரை கடன் பெறலாம்

அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் (Post Office) சென்று அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கைத் தொடங்கலாம். இதில் 100 ரூபாயில் இருந்து முதலீட்டை தொடங்கலாம். போஸ்ட் ஆபிஸ் ஆர்டி -இன் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால் இந்த காலம் முடிவதற்குள் கணக்கை மூட விரும்பினால், இந்த சேமிப்பு திட்டத்தில் (Saving Scheme) இந்த வசதியும் உள்ளது. முதலீட்டாளர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ரீ-மெச்யூர் க்லோசரை (Pre-Mature Closure) செய்யலாம். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ அரியர் பற்றிய மெகா அப்டேட்

இதில் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. கணக்கு ஓராண்டு செயல்பாட்டில் இருந்த பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம். இருப்பினும், கடனுக்கான வட்டி விகிதம் (Interest Rate) திட்டத்தின் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம்.

10 வருடங்களில் 8 லட்சத்துக்கும் மேல் ஈட்டலாம்

போஸ்ட் ஆபிஸ் ஆர்டியில் முதலீடு மற்றும் வட்டியின் கணக்கீடு: 

- இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 முதலீடு செய்தால், அதன் முதிர்வுக் காலத்தில் அதாவது ஐந்து வருடங்களில் மொத்தம் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்வீர்கள்.

- மற்றும் அதற்கான வட்டி 6.7 சதவீதமாக இருக்கும். 

- உங்கள் மொத்த தொகையில் ரூ.56,830 சேர்க்கப்படும். 

- அதாவது ஐந்து வருடங்களில் உங்கள் மொத்த நிதி ரூ.3,56,830 ஆக இருக்கும். 

- இப்போது உங்கள் RD கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 10 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். 

- இதன் மூலம், இந்த டெபாசிட்டுக்கான வட்டித் தொகை 6.7 சதவீதமாக, அதாவது ரூ.2,54,272 ஆக இருக்கும். 

- அதன்படி பார்த்தால், 10 ஆண்டுகளில் உங்கள் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த நிதி ரூ.8,54,272 ஆக இருக்கும்.

RD க்கு மட்டுமே அரசாங்கம் வட்டி விகிதத்தை உயர்த்தியது

தபால் அலுவலகத்தின் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்பட்டுகின்றன. சமீபத்தில் இவை 29 செப்டம்பர் 2023 அன்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை அரசு அஞ்சலக ஆர்டி -க்கான வட்டியை மட்டுமே உயர்த்தியுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), PPF, கிசான் விகாஸ் பத்ரா (KVP) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஆகியவற்றில் பழைய வட்டி விகிதங்களே தொடர்கின்றன. அதாவது, இவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

மேலும் படிக்க | Paytm Payments Bank -க்கு எதிராக ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News