Senior Citizen Saving Scheme: மனிதர்களாகிய நம் அனைவருக்கும் சேமிப்பு ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் அனைவராலும் வழக்கமான முறைகளில் பணம் ஈட்ட முடியாது. ஆகையால் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்காக இளம் வயதில் இருந்தே சேமித்து வைப்பது நல்ல பழக்கமாக பார்க்கப்படுகின்றது. நம் நாட்டில் பணத்தை சேமிக்க பலவித திட்டங்கள் உள்ளன. இவற்றில் பல திட்டங்களுக்கு அரசாங்கத்தின் உத்தரவாதம் கிடைப்பதால் பாதுகாப்பான வழியில் நல்ல வட்டியுடன் ஒரு பெரிய தொகையை நம்மால் சேகரிக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலாபகரமான வருமானத்தை அளிக்கும் சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizens Saving Schemes) அதாவது SCSS திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், 55 முதல் 60 வயது வரையிலான ஓய்வு பெற்ற சிவிலியன் ஊழியர்கள், 50 முதல் 60 வயது வரையிலான ஓய்வு பெற்ற பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோருக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது. இந்த திட்டம் 8.2% ஆண்டு வட்டிக்கு (SCSS Interest Rates) உத்திரவாதம் அளிக்கின்றது. இது டெபாசிட் செய்யப்பட்ட தேதியிலிருந்து காலாண்டு அடிப்படையில் அளிக்கப்படுகின்றது. ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இது செலுத்தப்படுகின்றது. 


SCSS: இந்த கணக்கை திறப்பது எப்படி?


- மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் கணக்கை (SCSS Account) தனியாகவோ அல்லது வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்தோ திறக்கலாம்.


- ரூ.1,000 மற்றும் அதன் மடங்குகளில் கணக்கை திறந்து முதலீடு செய்யலாம். 


- முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை 30 லட்சம் ரூபாய் ஆகும்.


- இதைவிட அதிகமாக டெபாசிட் செய்யப்படும் தொகை முறையாக ரீஃபண்ட் செய்யப்படுகிறது.


- அதிகப்படியான காலத்திற்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி வழங்கப்படுகிறது


SCSS திட்டத்தின் முக்கிய அம்சங்கள்


SCSS திட்டத்தில் வட்டி எவ்வாறு செலுத்தப்படுகிறது?


காலாண்டு வட்டி,  வைப்பு தேதியிலிருந்து  குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு (மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டியம்பர் 31) அதிகரிக்கின்றது. கோரப்படாத வட்டி தொகை மேலும் சேகரிக்கப்படாது.


இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வரி சலுகைகள் என்ன? (SCSS Tax Benefits)


SCSS டெபாசிட் தொகை, வருமான வரி சட்டம், 1961 இன் கீழ் 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் நன்மைகளுக்கு தகுதி பெறுகின்றது.


கணக்கை மூடுவதற்கான விதிமுறை


SCSS கணக்கை திட்டத்தின் கால அளவிற்கு முன்பே மூட முடியும். கணக்கு திறக்கப்பட்ட தேதியுடன் மூடும் தேதி ஒத்திசைக்கப்பட்டு அதன் அடிப்படையில் கழிப்புகள் கணக்கிடப்படும்


SCSS: இந்தத் திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் என்ன? (SCSS Maturity Period) 


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு SCSS கணக்கை மூடலாம். எனினும், முதலீட்டாளர் விரும்பினால் இதை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். கணக்கு நீட்டிக்கப்பட்டால் அப்போது நடைமுறையில் உள்ள விகிதங்களில் வட்டி கிடைக்கும்.


மேலும் படிக்க | ஆசை காட்டி மோசம் செய்யும் Intraday Trading: SEBI ஆய்வில் வெளிவந்த ஷாக்கிங் தகவல்


SCSS திட்டத்தின் கீழ் கிடைக்கும் வருமானம் எவ்வளவு? (SCSS Benefits)


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்


- ஒரு நபர் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ரூ.7,05,000 வருமானம் கிடைக்கும்


- ஒருவர் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ரூ.14,10,000 வருமானம் கிடைக்கும்.


வருமான வரி விவரங்கள்


அனைத்து கணக்குகளிலும் கிடைக்கும் வட்டித்தொகை 50 ஆயிரம் ரூபாயை தாண்டும் போது அதற்கு வரி விதிக்கப்படும். 


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டமாக விளங்குகிறது. இது மூத்த குடிமக்களுக்கு நிதி நிலைத்தன்மையை அளிப்பதோடு சிறந்த முறையில் வரியை சேமிக்கவும் உதவுகிறது. 


இந்த திட்டம் தொடர்பான அதிக விவரங்களுக்கு முதலீடாளர்கள் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது ஆன்லைனிலும் இந்த திட்டம் பற்றி முழுமையான தகவல்களை பெற முடியும்.


(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.)


மேலும் படிக்க | National Pension Scheme: பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றத்தால் பிரபலமாகுமா NPS?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ