National Pension Scheme: பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றத்தால் பிரபலமாகுமா NPS?

National Pension Scheme: இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 25, 2024, 01:18 PM IST
  • பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன?
  • தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அமசங்கள்.
  • பழைய வரி முறையில் கிடைக்கும் நன்மைகள் என்ன?
National Pension Scheme: பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றத்தால் பிரபலமாகுமா NPS? title=

National Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதியத் அமைப்பு மெல்ல பிரபலமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகமானோர் தங்கள் ஓய்வூதியத் திட்டத்திற்காக NPS -ஐ பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பழைய வரி முறையின் கீழ் ஏற்கனவே இதில் ரூ. 50,000 கூடுதல் பலன் கிடைத்து வந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் NPS -இல் கூடுதல் நன்மையும் அளிக்கப்பட்டுள்ளது. 

NPS: நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது

இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கவனிகத்தக்க அறிவிப்புகளில் NPS தொடர்பாக வெளிவந்த அறிவிப்பும் மிக முக்கியமானது. NPS -க்கான நிறுவனங்களின் பங்களிப்பு 10% -இலிருந்து 14% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகின்றது,

NPS திட்டத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றும் முயற்சி

சமீபத்திய மாற்றங்கள் சம்பளம் பெறும் வகுப்பினருக்கு NPS ஐ மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், பிரபலமாகவும் ஆக்குமவதை நோக்கமாக கொண்டுள்ளன. ஆனால், இதன் பலன் சில வரம்புகளுக்கு உட்பட்டது. ஏனெனில், இது புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் சம்பளம் பெறாத வகுப்புகளுக்கு இதை பயன்படுத்த முடியாது.

NPS: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அமசங்கள்

நீங்கள் ‘இண்டிவிஜுவல்’ பிரிவில் வரி செலுத்தும் நபராக இருந்தால், NPS க்கு வெவ்வேறு பங்களிப்புகளை கொண்டு க்ளெய்ம் செய்ய முடியும். NPS -இல் ‘இண்டிவிஜுவல்’ வகையின் அடிப்படையில், பல்வேறு வகையான பங்களிப்புகள் உள்ளன. சில உதாரணங்கள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். நீங்கள் ஒரு பணியாளராக இருந்து, NPS, நிறுவனம் மூலம் வழங்கப்படும் ஓய்வூதிய இழப்பீட்டின் ஒரு பகுதியாக இருந்தால், நிறுவனம் மற்றும் பணியாளர் இரு தரப்பும் பங்களிக்கும். சம்பளம் பெறாத தனிநபர்கள் தாமாக முதலீடு செய்தால், அந்த திட்டத்தில் அவர் மட்டுமே முதலீடு செய்வார். 

பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, பணியாளர் மற்றும் நிறுவனம் என இரு தரப்பும் பங்களிக்கும் NPS கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆகையால் தாமாக இதில் பங்களிக்கும் நபர்களுக்கு இதனால் எந்த பலனும் கிடைக்காது. 

பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன?

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைத் தவிர, NPS -இல் பங்களிக்கும் முதலாளிகள் / நிறுவனங்கள் புதிய வரி விதிப்பில் உள்ள பணியாளர்களின் ஊதியத்தில் 14% -ஐ பங்களிக்க வேண்டும். முன்னதாக, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே முதலாளி / நிறுவனங்களின் பங்களிப்பு 14% ஆக இருந்தது. தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய பிற நிறுவனங்களுக்கு இது 10% மட்டுமே இருந்தது.

மேலும் படிக்க | டிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோ

NPS: பழைய வரி முறையில் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பழைய வரி முறையில் (Old Tax Regime) ​​NPS தனிநபர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. பணியாளரின் பங்களிப்பில், பிரிவு 80CCD (1) மற்றும் பிரிவு 80C இன் கீழ் அவர்களது சொந்த பங்களிப்பு ரூ 1.5 லட்சம் வரை விலக்குக்கு தகுதியுடையது. பிரிவு 80CCD(1B) இன் கீழ் 50,000 ரூபாய் கூடுதல் பங்களிப்பும் அனுமதிக்கப்படுகிறது, இதன் மொத்தப் பலன் ரூ 2 லட்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வரி விதிப்பு

புதிய வரி முறையின் (New Tax Regime) கீழ் பணியாளர்களின் பங்களிப்புகளுக்கு வரிச் சலுகைகளை கோர முடியாது. எனினும், இந்த முறை பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் இப்போது கூடுதல் நன்மைகள் கிடைக்கும். 

மேலும் படிக்க | Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News