மூத்த குடிமக்கள் ஓய்வு காலத்தில் மாத வருமானம் ஈட்ட முதலீட்டு திட்டம்: மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்றப் பிறகும் மாத வருமானத்தைப் பெற்றால், அவர்கள் பெரிதும் பயனடையலாம். இத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்கள் முதலீடு செய்வதன் மூலம் பயனடையக்கூடிய சில திட்டங்களைப் பற்றி நாம் காண உள்ளோம். இது தவிர, இதுபோன்ற மற்றொரு திட்டத்தின் தகவலும் தரப்பட்டுள்ளது, இதில் லட்சக்கணக்கான நிதியையும் நீங்கள் திரட்டலாம். வாருங்கள் இப்போது இதைப் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சிறு சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஆகியவற்றில் முதலீடு செய்து வழக்கமான வட்டி வருமானத்தைப் பெறலாம். வட்டியானது காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும் மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து 31 மார்ச்/30 ஜூன்/30 செப்டம்பர்/31 டிசம்பர் வரை பொருந்தும். இதன் கீழ், அசல் தொகைக்கு ஐந்து ஆண்டுகள் லாக்-இன் நேரம் உள்ளது. 


மேலும் படிக்க | Ayushman Card: மத்திய அரசின் ஆயுஷ்மான் கார்ட் வைத்து இருந்தால் இவ்வளவு பயன்களா?


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) - ஒரு தனிநபரால் திறக்கப்படும் அனைத்து SCSS கணக்குகளிலும் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 1000 ஆகவும், அதிகபட்ச வரம்பு ரூ. 30 லட்சமாகவும் இருக்கும். SCSS கணக்கை உங்கள் மனைவியுடன் தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்கலாம். 1 லட்சத்திற்கு மேல் உள்ள டெபாசிட்கள் காசோலை மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த திட்டமானது பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையது.


தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) கணக்கு:
POMIS (தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்) என்பது மற்றொரு சிறு சேமிப்பு திட்டமாகும், மேலும் தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தில் தற்போது ரூ.9 லட்சம் வரை சேமிக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வருமானமும் பெறலாம். தற்போது இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி விகிதம் மாறும். POMIS இல் உள்ள முதலீடுகள் எந்த வரிச் சலுகைகளுக்கும் தகுதியற்றவை மற்றும் வட்டிக்கு முழுமையாக வரி விதிக்கப்படும்.


நிலையான வைப்பு (FD):
பெரும்பாலான வங்கிகள் வழக்கமாக மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு கால FDகளில் வழங்கப்படும் வழக்கமான வட்டி விகிதங்களுக்கு மேல் 0.50 சதவீத கூடுதல் வட்டியை வழங்குகின்றன. மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் - முதலீட்டாளர்களுக்கு வழக்கமான இடைவெளியில் FD வட்டி செலுத்தப்படுகிறது. வங்கிகள் வைப்பு காலத்தின் அடிப்படையில் வருமானத்தை அளிக்கிறது. சில நிலையான வைப்புகளுக்கு, முதிர்வு காலம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாகும். இதில் நீங்கள் வரிச் சலுகைகளையும் பெறலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு உள்ளது. அதேசமயம், FD திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. இது தவிர இது பல விருப்பங்களுடன் வருகிறது. எனவே, இது அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வருமான ஆதாரமாக இருக்கும். அவர்கள் தங்கள் சேமிப்பில் சிலவற்றை முதலீடு செய்யலாம் மற்றும் மாதாந்திர வருவாயை உறுதிப்படுத்த மாதாந்திர வருமானத்தைத் தேர்வு செய்யலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. சம்பள உயர்வு, ரூ.95680 கணக்கில் வரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ