கார்ப்பரேட் வரி குறைப்பு எதிரொலி; பங்குச் சந்தை கிடுகிடு உயர்வு!
கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிலையில்., பங்குச் சந்தை கிடுகிடு உயர்வு கண்டுள்ளது.
கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிலையில்., பங்குச் சந்தை கிடுகிடு உயர்வு கண்டுள்ளது.
கார்ப்பரேட் வரி விகிதங்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22% ஆகவும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% ஆகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில்., “வளர்ச்சி மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்காக, 2019-20 நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் ஒரு புதிய ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளது, இது எந்தவொரு உள்நாட்டு நிறுவனத்திற்கும் 22% என்ற விகிதத்தில் வருமான வரி செலுத்த விருப்பத்தை அனுமதிக்கிறது. இந்த நிறுவனங்களுக்கான பயனுள்ள வரி விகிதம் கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் உட்பட 25.17% ஆக இருக்கும். மேலும், அத்தகைய நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த தேவையில்லை,” என தெரிவித்துள்ளார்.
இந்தத் திருத்தம் வருமான வரிச் சட்டத்தில் 2019-20 நிதியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது, இது எந்தவொரு புதிய உள்நாட்டு நிறுவனத்தையும் அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு இணைத்து உற்பத்தியில் புதிய முதலீட்டைச் செய்ய அனுமதிக்கிறது.
எந்தவொரு விலக்கையும் / ஊக்கத்தையும் பெறாத மற்றும் 2023 மார்ச் 31 அல்லது அதற்கு முன்னர் தங்கள் உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு இந்த நன்மை கிடைக்கிறது. இந்த நிறுவனங்களுக்கான பயனுள்ள வரி விகிதம் கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் உட்பட 17.01%-ஆக இருக்கும். மேலும், அத்தகைய நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த தேவையில்லை.
இந்த அறிவிப்பை அடுத்து பங்குச் சந்தை புள்ளிகள் கிடு கிடு உயர்வு கண்டுள்ளது. சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்வு, நிஃப்டி 10,960-க்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது.
காலை 11.22 மணி நிலவரப்படி, பிஎஸ்இ சென்செக்ஸ் 1288.86 புள்ளிகள் அல்லது 3.57 சதவீதம் அதிகரித்து 37,382.33 ஆக உயர்ந்தது, என்எஸ்இ நிஃப்டி 11,000 மட்டத்திற்கு மேல் 369.90 புள்ளிகள் அல்லது 3.46 சதவீதம் உயர்ந்து 11,074.70 ஆக உயர்ந்தது.