ஓய்வுபெறுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: உருக்கமாய் போட்ட ட்வீட்
Shaktikanta Das: இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார்.
Shaktikanta Das: இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார். பதவியை விட்டு விலகுவதற்கு முன், சக்திகாந்த தாஸ் சமூக ஊடக தளமான X இல், ‘இன்று நான் ஆர்பிஐ ஆளுநர் (RBI Governor) பதவியில் இருந்து விலகுகிறேன். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நாட்டிற்குச் சேவையாற்றுவதற்கான வாய்ப்பையும், வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பிரியாவிடையில் சக்திகாந்த தாஸ் நன்றி தெரிவித்துள்ளார். சக்திகாந்த தாஸ் தனது ட்வீட்டில், ‘மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தொடர்ச்சியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. நிலையான-பண ஒருங்கிணைப்பு சிறந்ததாக இருந்தது. மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் பல சவால்களை சமாளிக்க எங்களுக்கு உதவி கிடைத்தது.’ என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!
ரிசர்வ் வங்கி புதிய உயரங்களை தொடும் என விரும்புகிறேன்: சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ் நிதித் துறை மற்றும் பொருளாதாரம், தொழில் அமைப்புகள் மற்றும் சங்கங்கள், நிறுவனங்கள், சேவைத் துறை நிறுவனங்களின் உள்ளீடுகள் மற்றும் கொள்கை பரிந்துரைகளுக்காக அனைத்து பங்குதாரர்கள், நிபுணர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தாஸ் தனது செய்தியின் முடிவில், 'ரிசர்வ் வங்கியின் முழு குழுவிற்கும் மிக்க நன்றி. முன்னோடியில்லாத, உலகளாவிய அதிர்ச்சிகள் நிறைந்த மிகவும் கடினமான காலகட்டத்தை ஒன்றாக, வெற்றிகரமாக கடந்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டோம். ரிசர்வ் வங்கி நம்பகமான நிறுவனமாக உயர வேண்டும் என்பதே எனது விருப்பம். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என தெரிவித்துள்ளார்.
சக்திகாந்த தாஸ் 2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநரானார்
ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகிய பிறகு, சக்திகாந்த தாஸ் டிசம்பர் 12, 2018 அன்று ஆர்பிஐ ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரது ஆறு ஆண்டு பதவிக் காலத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கு மேல் பொருளாதார வளர்ச்சியை பராமரிப்பதில் தாஸ் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், இதற்கு முன்பு வருவாய்த் துறை மற்றும் பொருளாதார விவகாரத் துறை செயலாளராகப் பணியாற்றியவர். உர்ஜித் படேல் பதவியில் இருந்து விலகிய பிறகு, ரிசர்வ் வங்கியில் தாஸின் நியமனம் சர்ச்சையின்றி இருக்கவில்லை. எனினும், பொருளாதார ரீதியாக திறன் மிகுந்த நிர்வாகத்தை அவர் அளித்தார் என்பதில் சந்தேகமில்லை.
Sanjay Malhotra: சஞ்சய் மல்ஹோத்ரா நாளை பொறுப்பேற்கிறார்
ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) அடுத்த ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11ஆம் தேதி, அதாவது நாளை பதவியேற்க உள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவைக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கள்கிழமை தெரிவித்தது. 1990-ம் ஆண்டு ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான மல்ஹோத்ரா, சக்திகாந்த தாஸுக்கு அடுத்தபடியாக ஆர்பிஐ கவர்நர் பதவியை வகிப்பார். மத்திய வங்கியின் 26வது ஆளுநராக அவர் பதவியேற்கவுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ