பங்குச் சந்தையில், சில நிறுவன பங்குகளில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது, பல மடங்கு வருமானத்தை அளித்து தங்கள் முதலீட்டாளர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளன. அத்தகைய ஒரு பங்கு மதுபான உற்பத்தி நிறுவன மான பிக்காடிலி அக்ரோ இண்ட்ஸ் லிமிடெட்  (Piccadily Agro Inds Limited). வெறும் 25 பைசா என்ற விலையில் இருந்த இந்த பங்கு, புயல் வேகத்தில் ஓடி முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கியுள்ளது. 1997 முதல் இப்போது வரை, இந்த பங்கு 112,700.00% வருமானத்தை அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுபானம் தயாரிக்கும் நிறுவனம்


பிக்காடிலி அக்ரோ இன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விஸ்கி இண்ட்ரி, தனது பங்குகள் மூலம் முதலீட்டாளர்களின் தலைவ்எழுத்தை மாற்றியுள்ளது. இண்ட்ரி சிங்கிள் மால்ட் இந்திய விஸ்கி உலகின் சிறந்த விஸ்கி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. இண்ட்ரி விஸ்கிக்கு 2023 ஆம் ஆண்டில் 'விஸ்கி ஆஃப் தி வேர்ல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த விஸ்கியை தயாரித்த பிக்காடிலி அக்ரோ இண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்து வருகின்றன. 1997ல் 25 பைசாவாக இருந்த பங்கு 65,100 சதவீதம் உயர்ந்து ரூ.165 ஆக இருந்தது. அதாவது, 1997-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்குகளில் எந்த முதலீட்டாளரும் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்து வைத்திருந்தால், அக்டோபர் 2023-ன் தொடக்கத்தில் அவருடைய சொத்து ரூ.65 கோடியாக உயர்ந்திருக்கும். அக்டோபர் 3 ஆம் தேதி, பங்குகளில் (Share Market),20 சதவிகிதம் உயர்வு பதிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் அக்டோபர் 4 ஆம் தேதியும் இந்த போக்கு தொடர்ந்தது.


ஒரே மாதத்தில் பங்கு விலை மிகவும் உயர்ந்துள்ளது


அக்டோபர் தொடக்கத்தில் இருந்து, நிறுவனத்தின் பங்குகள் கொடுத்த வருமானம் மேலும் அதிகரித்துள்ளது. வாரத்தின் நான்காவது வர்த்தக நாளில் பிக்காடிலி அக்ரோ இண்ட்ஸ் பங்குகள் ரூ.282 அளவில் முடிவடைந்தது. அதன்படி பார்த்தால், ஜூலை 11, 1997 முதல் அக்டோபர் 19, 2023 வரை இந்தப் பங்கின் வருமானம் 1,12,700%. இந்த பங்கு அதன் முதலீட்டாளர்களை மாதந்தோறும் பணக்காரர்களாக ஆக்கியுள்ளது என்பது தெளிவாகிறது.


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!


கடந்த ஐந்து ஆண்டுகளில் பிக்காடிலி அக்ரோ இண்ட்ஸ் பங்குகளின் செயல்திறனைப் பார்த்தால், அதன் வேகத்தை எளிதாக மதிப்பிட முடியும். அக்டோபர் 26, 2018 அன்று, நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.12.03 மட்டுமே, அதாவது இந்த ஐந்து ஆண்டுகளில் பங்கின் விலை 2,244.14% அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில், இந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்ட வருமானம் 439.20%, அதேசமயம் கடந்த 6 மாதங்களில் பேசினால், முதலீட்டாளர்களுக்கு 475.28% அபரிமிதமான லாபத்தை அளித்துள்ளது. வியாழன் அன்று சரிவைக் கண்டாலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தப் பங்கு 173.65% லாபத்தைக் கொடுத்துள்ளது.


இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதகரிக்கும் டிமாண்ட்


பிக்காடிலி அக்ரோ லிமிடெட் நிறுவனத்தின் இந்திரி விஸ்கிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக கிராக்கி உள்ளது. தற்போது, ​​இது இந்தியாவின் 19 மாநிலங்களில் வழங்கப்பட்டு விற்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்த பிராண்ட் உலகின் 17 நாடுகளில் கிடைக்கிறது. இந்த விஸ்கியின் சிறப்பு என்னவென்றால், இரண்டு வருடங்கள்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிக்காடில்லி டிஸ்டில்லரீஸின் இந்த விஸ்கி பிராண்ட் 2021 ஆம் ஆண்டில் ஹரியானாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஆலை ஹரியானாவில் மட்டுமே உள்ளது.


(குறிப்பு - பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ