Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!

Business Idea: ஆலோ வேரா ஜெல் உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் மாதத்திற்கு லட்சங்களை சம்பாதிக்கவும், லாபத்தை கொடுக்கும் இந்த தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2023, 04:24 PM IST
  • ஆலோ வேரா சரும பிரச்சனைகளை தீர்க்கும் திறன் பெற்றது.
  • உணவு மற்றும் மருந்துத் துறைகளிலும் தனி இடத்தைப் பெற்றுள்ளது.
  • காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) ஆலோ வேரா தயாரிப்பி தொழிலின் திட்ட அறிக்கை.
Business Idea: லட்சங்களில் வருமானம் தரும்  ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்! title=

நீங்கள் ஆர்வமுள்ள தொழில்முனைவோராக இருந்து, கணிசமான லாபம் தரும் தொழிலில் ஈடுபட விரும்பினால், உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. இன்று லாபத்தை தரும் இந்த வணிகம், அழகு மற்றும் சுகாதாரப் பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது. ஆலோ வேரா ஜெல்லின் செழிப்பான சந்தை வாய்ப்புகள் பற்றி இன்று விவாதிப்போம்.

ஆலோவேரா சரும பிரச்சனைகளை தீர்க்கும் திறன் பெற்றது. அழகு கலை தொடர்பான விஷயங்களிலும் சரி, ஆடம்பரமான இரவு கிரீம்கள் முதல் புத்துணர்ச்சியூட்டும் சோப்புகள், புத்துணர்ச்சியூட்டும் ஷாம்புகள், வெயிலில் இருந்து காக்கும் சன்டான் லோஷன்கள் மற்றும் மென்மையான க்ளென்சர்கள் வரை பலவிதமான அழகுசாதனப் பொருட்களில் ஆலுவேரா பயன்படுத்தப்படுகிறது. அலோ வேரா அதன் குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்களாலும் பிரபலமாக உள்ளது. அதன் குணப்படுத்தும் தன்மை, சரும அழகை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆலோ வேரா அழகுசாதனப் பொருட்கள் துறையில் மட்டுமல்ல, உணவு மற்றும் மருந்துத் துறைகளிலும் அதற்கு என தனது இடத்தைப் பெற்றுள்ளது.

ஆலுவேரா என்னும் இந்த அதிசய தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்பட்ட கற்றாழை ஜெல், நுகர்வோர் மற்றும் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில் குறிப்பிடத்தக்க தேவை உள்ள நிலையில், மிகவும் விரும்பப்படும் அழகு சாதன பொருளாக உள்ளது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) வெளியிட்டுள்ள அறிக்கை

பருவங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும் பல வணிகங்களைப் (Business Idea) போலல்லாமல், ஆலுவேரா ஜெல்வணிகமானது ஆண்டு முழுவதும் ஸ்திரமான வருமானத்தை தரும் தொழிலாக இருக்கும். காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) ஆலுவேரா ஜெல் தயாரிப்பு தொழில் சாத்தியக்கூறு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.\

மேலும் படிக்க | மருத்துவ கூரியர் சேவை: ₹7 லட்சம் முதலீட்டில் மாதந்தோறும் ₹1-2 லட்சம் சம்பாதிக்கலாம்!

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) திட்ட விவரத்தின்படி, ஆலோவெரா ஜெல் உற்பத்தி அலகு பின்வரும் செலவைக் கொண்டிருக்கும்.

ஆலோவெரா ஜெல் உற்பத்திக்கான திட்டத்தின் செலவு குறித்த விபரம்

1. நிலம் / வாடகைக்கு

2. கட்டிடம் / கொட்டகை 500 சதுர அடி: ரூ 2 லட்சம்

3. தொழிற்சாலை மற்றும் இயந்திரம்: ரூ 18 லட்சம்

4, மரச்சாமான்கள் மற்றும் சாதனங்கள்: ரூ 1.50 லட்சம்

5. செயல்பாட்டு மூலதனம்: ரூ 3.33 லட்சம்

மொத்தம்: 24.83 லட்சம்

அலோவெரா ஜெல் உற்பத்திக்கான நிதி வழிமுறைகள்

1. சொந்த பங்களிப்பு: ரூ 2.48 லட்சம்

2. செயல்பாட்டு மூலதனம் (நிதி): ரூ 3.00 லட்சம்

3. டெர்ம் கடன்: ரூ 19.35 லட்சம்

மொத்தம்: 24.83 லட்சம்

KVIC திட்ட அறிக்கையின்படி, நீங்கள் ஆண்டு தோறும், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, இரண்டாம், ஆண்டு, நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு  ஆகிய ஆண்டுகளில்  முறையே, ரூ. 66.38 லட்சம், ரூ. 77.87 லட்சம், ரூ. 88.97 லட்சம், ரூ. 1.06 கோடி, மற்றும் ரூ. 1.12 கோடி, என்ற அளவில் மொத்த விற்பனையை எதிர்பார்க்கலாம். 

KVIC வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையின் படி,  ஆண்டு தோறும் பெறும் வருமானம் ஆனது, முதல் ஐந்து ஆண்டுகளில், முறையே, நிகர லாபம் ரூ.5.26 லட்சம், ரூ.7.36 லட்சம், ரூ.10.13 லட்சம், ரூ.13.53 லட்சம் மற்றும் ரூ.17.41 லட்சம் என என்ற அளவில் இருக்கும் என பரிந்துரைத்துள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையானது தகவல் நோக்கத்திற்காகவும், வாசகர்களுக்கு தொழில் திட்ட யோசனைகளை வழங்கும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. தொழில் மூலம் கிடைக்கும் வருமான அளவுகள், குறிப்பிட்ட வகை தொழிலின் உதாரணத்தை வழங்குவதற்கான அனுமான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. Zee News கட்டுரை எந்த விதமான நிதி ஆலோசனைகளையும் வழங்க விரும்பவில்லை. எந்தவொரு முயற்சியையும் தொடங்குவதற்கு, நீங்கள் உங்கள் சொந்த விடாமுயற்சி மற்றும் சந்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.)

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News