SIP முதலீடு: மாதம் ரூ.10,000 முதலீட்டில்... குறைந்த காலத்தில் ஒரு கோடி நிதியை உருவாக்குவது எப்படி
SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை பரஸ்பர நிதியங்களில் உங்கள் வசதிக்கேற்ப, மாதம் தோறும் அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும். SIP முதலீட்டு முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வேகமாக அதிகரித்து வருகின்றனது. அதற்கு காரணம் வருமானம் அதிகமாக இருப்பது தான். SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியங்களில் உங்கள் வசதிக்கேற்ப, மாதம் தோறும் அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும். SIP முதலீட்டு முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது.
தற்போது, SIP ஆனது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் சிறிய அளவில் முதலீடு செய்வதன் மூலம், சிறந்த வகையில் வருமானத்தை பெறலாம். நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்ச வருமானத்தைப் பெறுவீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். SIP மூலம் பரஸ்பர நிதிகளில் மாதந்தோறும் உங்கள் வசதிக்கேற்ப ரூ.500 என்ற அளவில் கூட முதலீட்டை தொடங்கலாம். இந்நிலையில், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50,000 வரை முதலீடு செய்யும் நிலையில், எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி நிதியை உருவாக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
SIP என்னும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் ஒருவர் பரஸ்பர நிதியங்களில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், ரூ.1 கோடியை எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பரஸ்பர நிதியத்தில், சராசரியாக 12 சதவிகிதம் வருடாந்திர வருமானம் கிடைக்கும் என்பதன் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில சமயங்களில் இதனை விட அதிக வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதாந்திர SIP ரூ.10,000: ரூ 10,000 மாதாந்திர முதலீட்டிற்கு 12% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (Compound Annual Growth Rate - CAGR) என்பதன் அடிப்படையில் 20 ஆண்டுகளில் ரூ 1 கோடி கார்பஸை உருவாக்கலாம்.
மாதாந்திர SIP ரூ.20,000: ரூ. 20,000 மாதாந்திர முதலீடு செய்து வந்தால் 15 ஆண்டுகளில் ரூ.1 கோடியை அடையலாம்.
மாதாந்திர SIP ரூ.25,000: ரூ 25,000 மாதாந்திர முதலீடு செய்து வந்தால் 14 ஆண்டுகளில் ரூ 1 கோடியை சேமிக்கலாம்.
மாதாந்திர SIP ரூ.40,000: ரூ 40,000 மாதாந்திர முதலீடு 11 ஆண்டுகளில் ரூ 1 கோடி சேமிக்கலாம்.
மாதாந்திர SIP ரூ.50,000: ரூ 50,000 மாதாந்திர முதலீடு செய்து வந்தால் 9 ஆண்டுகளில் ரூ.1 கோடியை அடையலாம்.
முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என்ற எண்ணம் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இன்றே முதலீட்டை தொடங்கவும். SIP என்பது ஒரு வங்கி RD போன்றது தான். ஆனால் இங்கே நீங்கள் வங்கிகள் கொடுக்கும் வட்டி வருமானத்தை விட சிறந்த வருமானம் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான எளிதான முறை தான் எஸ்ஐபி. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு பரஸ்பர நிதிய முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.
குறிப்பு: பரஸ்பர நிதிய முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. எனவே, முதலீட்டு முறைகள் குறித்து நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... ₹1 லட்சம் ஓய்வூதியம் தரும் SIP பிளான் இதோ...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ