SIP Investment Tips:இன்றைய காலகட்டத்தில், குறைவான சம்பளம் வாங்குபவர்கள் கூட, தங்களது கோடீஸ்வரராகும் கனவை நனவாக்கலாம். அதற்கு தேவை சரியான திட்டமிடல் மட்டுமே. அதற்கான சிறந்த முதலீடுகளில் ஒன்று பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் SIP முதலீடு. நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த வகையில், திட்டமிட்டு ம்யுசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். ஏனெனில், பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழக்கமாக, SIP முதலீட்டைத் தொடங்கும் போது, ​​ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை அதில் முதலீடு செய்கிறீர்கள். அதில் நீங்கள் 10 ஆண்டுகளுக்கு 2,000 ரூபாய் என்ற அளவில் SIP முதலீட்டை தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 5, 10, 20, என எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் அதனை இதே அளவில் தொடரலாம். ஆனால் டாப்-அப் SIP என்பது நீங்கள் உங்களின் டெபாசிட் திறனுக்கு ஏற்ப முதலீட்டை சிறிதளவு அதிகரிப்பது.


உங்கள் வழக்கமான SIP முதலீட்டு தொகையுடன் (Investment Tips) உங்களால் முடிந்த தொகையை முதலீட்டில் சேர்ப்பதன் மூலம் பணத்தை பன்மடங்காக்கலாம். உங்கள் வேலையின் தொடக்கத்தில், நீங்கள் ரூ.2,000 மாதாந்திர SIP என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்கள் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும். அந்த விகிதத்தில் ஒவ்வொரு வருடமும் உங்களால் முடிந்த தொகையை எஸ்ஐபியில் கூடுதலாக முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும்.


உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூ.2,000க்கு SIPஐத் தொடங்கி, நிலையில், அந்த ஆண்டு முடிவில், ரூ.2,000 முதலீட்டில் 10% அதாவது ரூ.200 என்ற அளவில் முதலீட்டை அதிகரித்து, ரூ.2,200 முதலீடு செய்வீர்கள். அடுத்த ஆண்டு, நீங்கள் ரூ. 2,200 இல் 10% அதாவது ரூ. 222 என்ற அளவில் முதலீட்டை அதிகரித்து, எஸ்ஐபி முதலீட்டை ரூ.2,422 என்ற அளவில் அதிகரித்திருப்பீர்கள். 


மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: CPPS புதிய ஓய்வூதிய முறை.... அரசின் பரிசு, இனி அதிக வசதிகள் கிடைக்கும்


நீங்கள் 2000 ரூபாயுடன் SIP முதலீட்டை ஆரம்பித்து, 10% டாப் அப் செய்து 10 ஆண்டுகளுக்கு இந்த SIP முதலீட்டை தொடரும் நிலையில், இதன் மூலம் நீங்கள் சராசரியாக 12 சதவீத வருமானம் பெறுவதாக கணக்கிட்டால் உங்கள் மொத்த முதலீடு ரூ.3,82,498 என்ற அளவில் இருக்கும். அதிலிருந்து கிடைக்கும் வட்டி ரூ.2,92,367 என்ற அளவில் இருக்கும். இதன் மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கையில் மொத்தம் ரூ.6,74,865 இருக்கும். 


எஸ்ஐபி முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு டாப்-அப்புடன் தொடர்ந்தால், மொத்த முதலீடு ரூ.7,62,540 என்ற அளவிலும், அதற்கான வட்டி ரூ.9,74,230 என்ற அளவிலும் இருக்கும். இதன் மூலம் 15 ஆண்டுகளில் ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கையில் மொத்தம் ரூ.17,36,770 இருக்கும்.


எஸ்ஐபி முதலீட்டை 20 ஆண்டுகளுக்கு டாப்-அப்புடன் தொடர்ந்தால், மொத்த முதலீடு ரூ.13,74,600 என்ற அளவிலும், அதற்கான வட்டி ரூ.26,03,143 என்ற அளவிலும் இருக்கும். இதன் மூலம் 20 ஆண்டுகளில் ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கையில் மொத்தம் ரூ.39,77,74 உங்கள் கையில் இருக்கும்.


எஸ்ஐபி முதலீட்டை 25 ஆண்டுகளுக்கு டாப்-அப்புடன் தொடர்ந்தால், மொத்த முதலீடு ரூ.23,60,329 என்ற அளவிலும், அதற்கான வட்டி ரூ.61,90,763 என்ற அளவிலும் இருக்கும். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கையில் மொத்தம் ரூ.85,51,092 இருக்கும்.


அதேசமயம், 10 ஆண்டுகளுக்கு 2,000 ரூபாய்க்கான எளிய SIPஐ இயக்கினால், 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4,64,678 என்ற அளவிலும், 15 ஆண்டுகளில் ரூ.10,09,152 என்ற அளவிலும், 20 ஆண்டுகளில் ரூ.19,98,296 மற்றும் 25 ஆண்டுகளின், மொத்தம் ரூ.37,95,270 என்ற அளவில் பணம் கிடைக்கும். இதிலிருந்து டாப் அப் முதலீடு மூலம் பணத்தை பன்மடங்காக்கலாம் என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ