SIP: மாதம் ₹999 முதலீடு போதும்... அதனை ₹9,99,999 ஆக மாற்றும் மேஜிக் பார்முலா!
SIP Investment Tips: இன்றைய காலகட்டத்தில், மாதம் ரூ.999 சேமிப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடு ஆயிரத்தை லட்சங்களாக்கும் திறன் கொண்டது.
SIP Investment Tips in Tamil: பொதுவாக 99 இல் முடிவடையும் எண் வசீகரிக்கும் தன்மை கொண்ட மேஜிக் எண். பொருட்களின் விலையை சில்லறை விற்பனையாளர்கள் நிர்ணயிக்கும் போது, அது வாடிக்கையாளர்கள் மனதில் அந்த பொருள் மலிவானது தான் என்ற எண்ணம் தோன்றும். வாடிக்கையாளர்கள் 99 என்ற இரண்டு இலக்கத்தை பார்க்கும் போது மலிவானது தான் என தோன்றும். ரூ. 100க்கு மிகக் குறைவானது என்ற எண்னத்தை விதைக்கும் இந்த உத்தி பலன் அளிக்கும்.
முதலீட்டைப் பொறுத்தவரை வரை, நாம் சிந்திக்கும் போது, பொதுவாக, ரூ 1,000, ரூ.5,000 அல்லது ரூ 10,000 போன்ற முழுமையான ரொக்க அளவைப் பற்றியே சிந்திப்போம். ரூ.99, ரூ.999 அல்லது ரூ.9,999 ஆகிய அளவில் முதலீடு செய்வதை நாங்கள் நினைக்கவே மாட்டோம். இன்று ரூ.999 என்ற மேஜிக் எண்ணை வைத்து முறையான முதலீட்டுத் திட்டத்தின் (SIP) மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் எந்த அளவிற்கு வருமானம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாதாந்திர முதலீட்டுக்கான ரூ. 999 என்ற எண்ணிக்கை சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அந்த முதலீட்டின் மூலம், நீங்கள் ரூ. 999,999, அதாவது 10 லட்சம் ரூபாய் என்ற மிகப்பெரிய அளவில் பணத்தை சேமிக்கலாம். SIP முதலீடு நீண்ட காலத்திற்கான தொடர் முதலீடாக இருக்கும் போது, சுமார் 15 முதல் 20 சதவிகித வருமானத்தை தருகிறது.
15 வருட தொடர் முதலீட்டில் கிடைக்கும் தொகை
சுமார் 15 வருடங்கள் அல்லது அதற்கு மேல் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தால், பணம் பன்மடங்காகும். ஒரு மாதத்தில் ரூ.999 முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் உங்கள் மொத்த முதலீடு ரூ.11,988 ஆக இருக்கும். 10 ஆண்டுகளில் இது ரூ.119,880 என்ற அளவில் முதலீடு செய்திருப்பீர்கள்.
மேலும் படிக்க | SIP... இளம் வயதிலேயே கோடீஸ்வரன் ஆக.. ‘இந்த’ ஃபார்முலாவை கடைபிடிங்க!
20 வருட தொடர் முதலீட்டில் கிடைக்கும் தொகை
பரஸ்பர நிதியத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் நிலையில் காலகட்டத்தில் உங்கள் முதலீடு ரூ. 2.40 லட்சமாக இருக்கும். அதே சமயம் உங்கள் நீண்ட கால மூலதன ஆதாயம், அதாவது வட்டி வருமானம் சுமார் ரூ. 7.60 லட்சமாக இருக்கும். இந்தத் தொகை மூலம் நீங்கள் ரூ.999,999, அதாவது 10 லட்சம் ரூபாய் என்ற எண்ணிக்கையைத் எளிதாக தொட்டு விடலாம்.
25 வருட தொடர் முதலீட்டில் கிடைக்கும் தொகை
உங்கள் முதலீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், அதாவது, மொத்தம் 25 ஆண்டுகளுக்கு, நீங்கள் எஸ்ஐபி என்னும் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் முதலீட்டு தொகை ரூ. 3 லட்சமாகவும், வருமானம் அல்லது மூலதன ஆதாயம் ரூ.15.96 லட்சமாகவும், மொத்தத் தொகை ரூ.18.96 லட்சமாகவும் இருக்கும். அதாவது பணம் இரட்டிப்பாகும்.
30 வருட தொடர் முதலீட்டில் கிடைக்கும் தொகை
மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், அதாவது, மொத்தம் 30 ஆண்டுகளுக்கு, முதலீடு செய்தால் தொகை ரூ. 3.60 லட்சமாகவும், நீண்ட கால லாபம் ரூ. 31.67 லட்சமாகவும், உங்களிடம் இருக்கு நிதி ரூ. 35.26 லட்சமாகவும் இருக்கும்.
குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. இதில் செய்யும் முன், நிதி ஆலோசகரின் உதவியைப் பெறுவதன் மூலம் சிறந்த வகையில் பயன் அடையலாம்.
மேலும் படிக்க | SBI அம்ரித கலசம் திட்டம்... இன்னும் 13 நாட்களே உள்ளன... மிஸ் பண்ணாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ