SIP - Mutual Fund Investment Tips in Tamil: பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் பணத்தை பன்மடங்காக்கலாம். திட்டமிட்டு சேமித்தால், கோடீஸ்வரனாக அதிக முதலீடு தேவையில்லை. பணத்தை சேமிக்க 50 - 30 - 20  என்று பார்முலாவை கடைபிடித்தால் எளிதில் பணத்தை சேர்க்கலாம். நிதி ரீதியாக உங்களை வலுப்படுத்தவும், உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். சேமித்த பணத்தை சரியான இடத்தில் முதலீடு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஃபார்முலா தான் 15 x 15x 15 சூத்திரம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணத்தை சேமிக்க  கடைபிடிக்க வேண்டிய ஃபார்முலா


பணத்தை சேமிக்கும் விதியின் படி உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதத்தை, வீட்டு வாடகை மளிகை பொருட்கள், போக்குவரத்து செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக செலவு செய்ய வேண்டும் செய்ய வேண்டும். வருமானத்தில் 30 சதவீத பணத்தை, பொழுதுபோக்கு, குடும்பத்துடன் வெளியில் செல்வது, ஹோட்டலில் உணவருந்துவது போன்றவற்றிற்காக செலவிடலாம். மீதமுள்ள 20% சேமிக்க வேண்டும். அவ்வாறு சேமிக்க நினைக்கும் பணத்தை, முறையான இடத்தில் முதலீடு (Investment Tips) செய்ய வேண்டும்.


அள்ளித் தரும் பரஸ்பர நிதியம்


எஸ்ஐபி என்னும் பரஸ்பர நிதியம், சுமார் 20 சதவீத வருமானத்தை கொடுக்கிறது. தொழில் ரீதியாக முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்கும் நிபுணர்களை கலந்தாலோசித்து, அவர்கள் உதவியுடன் மாதா மாதம் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால், பணம் பன்மடங்காகும். 


மேலும் படிக்க | No Cost EMI: வாடிக்கையாளர்களை கவரும் வட்டியில்லா கடன் தவணை! செயலாக்க கட்டணம் இல்லையா?


15 வருடங்களில் கோடீஸ்வரராக்கும் ஃபார்முலா


மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எளிமையானது மட்டுமல்ல, அபரிமிதமான வருமானத்தையும் தருகிறது.  பணக்காரர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற 30 வயதிலேயே முதலீட்டை தொடங்கினால் மிக எளிது. கோடீஸ்வரராகும் கனவு மிகவும் கடினம் அல்ல, உங்களுக்கு தேவையானது சில திட்டமிடல் மட்டுமே. இந்த இலக்கை அடைய 30 வயதான இளைஞர் 15 ஆண்டுகள்  தொடர்ந்து திட்டமிட்டு முதலீடு செய்தால், 45வது வயதில் அவர் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.


முதலீட்டை பன்மடங்காக பெருக்கும் 15 x 15 x 15 சூத்திரம்


பரஸ்பர நிதியத்திற்கு முதலீட்டை பன்மடங்காக பெருக்கும் ஆற்றல் இருக்கிறது. 15 x 15 x 15 சூத்திரத்தின் அடிப்படையில் முதலீடு என்பது 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்யும் நிலையில்,  இதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுதோறும் 15 சதவீத வட்டி என்ற பொதுவான கணக்கீடு செய்யும் போது இன்களிடம் ஒரு கோடிக்கும் அதிகமான அபணம் இருக்கும். 15 வருட காலகட்டத்தில் நீங்கள் மொத்தம் 27,00,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு, 15% வட்டியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் 74,52,946 ரூபாய் . இதன்படி உங்களிடம் இருக்கும் மொத்த நிதி ரூ.1,01,52,946  என்ற அளவில் இருக்கும். பரஸ்ப்ர முதலீட்டின் வரலாற்றைப் பார்த்தால், நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு 15 - 18 சதவீத வருமானம் கிடைத்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.


(முக்கிய குறிப்பு -  பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | ஹோலி பண்டிகைக்கு ஜாக்பாட்.. இலவசமாகப் பெறலாம் எல்பிஜி சிலிண்டர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ