PPF, SSY கணக்கு இருக்கா? இதை செய்து முடியுங்கள்.. இல்லையென்றால் கணக்கு முடக்கப்படும்
Small Saving Schemes: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்கை செயலில் வைத்திருக்க, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்பட வேண்டும்.
Small Saving Schemes: பிபிஎஃப் அல்லது செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றில் நீங்கள் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்கை செயலில் வைத்திருக்க, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக புதிய விதிமுறையும் அமலுக்கு வந்துள்ளது. மார்ச் 31, 2024 -க்குள் இந்தக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்பட வேண்டும். இந்த திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்றால், அவரது கணக்கு செயலிழந்து போகலாம்.
செயலிழந்த கணக்கை மீண்டும் திறக்க, கணக்கு வைத்திருப்பவர் அபராதம் செலுத்த வேண்டும். கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு என்ன? இதை மீண்டும் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)
பிபிஎஃப் கணக்கு (PPF Account) வைத்திருப்பவர் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாயாவது முதலீடு செய்யப்பட வேண்டும். கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றால், கணக்கு மூடப்படலாம். PPF கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2024 ஆகும்.
PPF கணக்கு செயலிழந்தால் என்ன செய்வது?
மார்ச் 31 ஆம் தேதிக்குள் 500 ரூபாய் கணக்கில் டெபாசிட் செய்யப்படாவிட்டால், கணக்கை மீண்டும் செயல்படுத்த அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 50 ரூபாய் என்ற அளவில் அதன் அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இதை இப்படிப் புரிந்து கொள்ளலாம். ஒருவரது கணக்கு 2 வருடங்கள் செயல்படாமல் இருந்தால், அந்த கணக்கை மீண்டும் செயல்படுத்துவதற்கு, முதலீட்டுத் தொகையுடன் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.
குறைந்தபட்ச இருப்பு இல்லாததால் கணக்கு செயலிழந்த நிலையில், கணக்கு வைத்திருப்பவருக்கு வேறு பல நன்மைகளும் கிடைக்காது.
- செயலற்ற கணக்கில் கடன் கிடைக்காது
- கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana)
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ரூ 250 ஆகும். அதாவது கணக்கை செயலில் வைத்திருக்க ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ 250 முதலீடு செய்ய வேண்டும்.
SSY கணக்கு செயலிழந்தால் என்ன செய்வது?
இந்தத் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை முதலீடு செய்யவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும். கணக்கை மீண்டும் செயல்படுத்த, கணக்கு வைத்திருப்பவர் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில், அரசாங்கம் 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது.
சிறு சேமிப்புத் திட்டங்கள்
சிறு சேமிப்புத் திட்டங்கள் என்பது நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையால் (DEA) கட்டுப்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களாகும். இந்தத் திட்டங்களில் அதிக மக்கள் ஆர்வம் காட்டும் சூழலை ஏற்படுத்தும் வகையில், அதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தற்போதுள்ள விதிகளைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாற்றம் அவர்களின் வசதிக்கேற்ப கணக்கைத் திறக்க உதவுகிறது. மூத்த குடுமக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய முதலீட்டுத் தேர்வை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ