செலவுகளுக்கு எப்போதும் நாம் பணம் வைத்திருப்போம். கையில் காசு இல்லாவிட்டால், நமது பலமே குறைந்தது போலத் தோன்றும். ரொக்க பணம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இன்றைய நவீன யுகத்தில் டிஜிட்டல் முறையில் செலவு செய்வதும் அதிகரித்து வருகிறது. அதிலும், இன்றைய இளைஞர்கள், கையில் ஒற்றை ரூபாய் கூட வைத்திருப்பதில்லை, அவர்கள் அனைத்து பணப் பரிமாற்றங்களையும் டிஜிட்டல் முறையிலேயே செய்கின்றனர்.
கோடி ரூபாய் பணம் நமது வங்கிக் கணக்கில் இருந்தால்கூட, கையில் பணம் இல்லை என்றால், கை ஒடிந்தது போல இருக்கிறது. ஆனால், ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை நினைத்துப் பாருங்கள்! பணம் என்பது அனைவரின் பர்ஸ்களில் கட்டாயம் இருக்கும்.
காலங்கள் மாற மாற வழக்கங்களும் பழக்கங்களும் செய்யும் செலவும் மாறுவது போல, டிஜிட்டல் பண பரிமாற்றம், பண பரிமாற்றங்களை எளிதாக்கிவிட்டது. ஆனாலும், நம் கையில் பணம் வைத்து செலவு செய்யும் பழக்கம் என்றும் மாறாது.
வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த, அரசு பணம் தொடர்பாக பல விதிகளை வகுத்துள்ளது.
கொரோனா காலம்
இந்த விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கொரோனா காலத்திற்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்துள்ளன. இப்போது எவ்வளவுப் பெரியத் தொகையாக இருந்தாலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்கிறோம்.
மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் இவ்வளவு பணம்தான் இருக்கலாம்: மீறினால் வருமான வரி நோட்டீஸ் வரும்
ரொக்கப் பண பரிவர்த்தனை
இணையத்தை சுலபமாக பயன்படுத்துபவர்கள் மட்டுமல்ல, இணையம் மூலம் வங்கி நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி தெரியாதவர்களும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலும், பல நேரங்களில் பணத்தின் மூலம் பரிவர்த்தனைகளை செய்ய விரும்புகிறார்கள்.
இதன் காரணமாக, மக்கள் இன்னும் நிறைய பணத்தை வீட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால் வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த, அரசு பணம் தொடர்பாக பல விதிகளை வகுத்துள்ளது. மாறும் காலத்திற்கு ஏற்ப, வீட்டில் எவ்வளவு ரொக்கப்பணத்தை வைத்திருக்கலாம்? அதற்கு வரம்பு இருக்கிறதா? எவ்வளவு பணத்தை வங்கிக் கணக்கில் வைத்திருக்கலாம்? என்பது போன்ற பல கேள்விகள் பலருக்கு உள்ளது. அதிலும், வீட்டில் எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்திருக்கலாம்? இவை தொடர்பான விதிகளை அறிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கலாம்.
ரொக்கப் பணம் வைத்திருப்பதற்கான விதிகள் என்ன?
வருமான வரி விதிகளின்படி, வீட்டில் பணத்தை வைத்திருப்பதில் சிறப்பு விதி அல்லது வரம்பு எதுவும் செய்யப்படவில்லை. பொருளாதார ரீதியாக பலம் உள்ளவர்களிடம் அதிக ரொக்கப் பணம் இருக்கலாம். தொழில் செய்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் வீட்டில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்தத் தொகைக்கான ஆதாரம் உங்களிடம் இருக்க வேண்டும்.
புலனாய்வு அமைப்பு உங்களிடம் உள்ள பணம் தொடர்பாக கேட்டால், உங்களிடம் உள்ள ரொக்கத்திற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இதைத் தவிர, ஐடிஆர் தொடர்பான தகவல்களையும் காட்ட வேண்டும். அதாவது, நீங்கள் தவறான வழியில் பணம் சம்பாதிக்கவில்லை, உங்களிடம் இருக்கும் பணத்திற்குக் கணக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். உங்கள் பணத்திற்குக் கணக்கு இருந்தால், நீங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை.
மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் தெரியுமா? வரம்பை மீறினால் சிக்கல்தான்
ரொக்கப் பணம் வைத்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படலாம்?
உங்களிடம் உள்ள ரொக்க பணத்தின் மூலத்தை விசாரணை நிறுவனத்திடம் சொல்ல முடியாவிட்டால், அது உங்களுக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த விவகாரம் குறித்து புலனாய்வு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீங்கள் எவ்வளவு வரி செலுத்தியுள்ளீர்கள் என்பதை வருமான வருமான வரித்துறை (Income Tax Department) சரிபார்க்கிறது. இதற்கிடையில், கணக்கீடுகளில் உங்களிடம் இருந்தது வெளியிடப்படாத பணம் என்றால் வருமான வரித்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், வெளியிடப்படாத தொகையில் 137% வரை வரி கட்ட வேண்டியிருக்கும்.
பணம் தொடர்பான பிற விதிகள்
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்படி, ஒரே நேரத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் இருந்து ரொக்கப் பணம் எடுத்தால், உங்கள் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் 194N பிரிவின் கீழ், ஒரு நபர் ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால், அவர் TDS செலுத்த வேண்டும். இருப்பினும், இந்த விதி தொடர்ந்து 3 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யாதவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடிஆர் அதாவது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு இந்த விஷயத்தில் சிறிது நிவாரணம் உண்டு. வருமான வரி செலுத்தும் நபர்கள் டிடிஎஸ் செலுத்தாமல் வங்கி, தபால் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.1 கோடி வரை பணத்தை எடுக்கலாம். ஒரு ஆண்டில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் 2% டிடிஎஸ் செலுத்த வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.20 லட்சம் பரிவர்த்தனைகளுக்கு 2% டிடிஎஸ் செலுத்த வேண்டும் என்றால், ரூ.1 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு 5% டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
இவற்றைத் தவிர, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஒரே நேரத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டால் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். இது தவிர, எந்த ஒரு கடையிலும் அல்லது நிறுவனத்திலும் இருந்து பொருட்களை வாங்க ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தக்கூடாது. இரண்டு லட்ச ரூபாய்க்கு அதிகமான பணம் கொடுக்கும்போது பான் மற்றும் ஆதாரை காட்ட வேண்டும்.
மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு சூப்பர் செய்தி, வருமானம் வந்தாலும் வரி செலுத்த வேண்டாம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ