Sovereign Gold Bond: இந்திய ரிசர்வ் வங்கி, சவரன் தங்க பத்திரத்தின் அடுத்த தொடர் டிசம்பர் 18ஆம் தேதி, அதாவது திங்கட்கிழமை முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் டிசம்பர் 22 வரை இதில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. தங்கப் பத்திரங்களில் ஐந்து நாட்களுக்கு முதலீடு செய்யலாம். ஒரு கிராமுக்கு ரூ.6199 வெளியீட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். தள்ளுபடிக்கு பிறகு அவற்றுக்கான விலை கிராமுக்கு ரூ.6149 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Sovereign Gold Bond: இவற்றை எங்கே வாங்கலாம்?


நீங்களும் இதில் முதலீடு செய்ய விரும்பினால், ஷெட்யூல் கமர்ஷியல் வங்கி, தபால் நிலையங்கள், ஷேர் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCIL), நியமிக்கப்பட்ட தபால் நிலையங்கள், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இந்தியா லிமிடெட் ஆகிய இடங்களிலிருந்து இவற்றை வாங்கலாம்.  


Sovereign Gold Bond: பிப்ரவரி 12-16 இடையே அடுத்த தொடர் வெளிவரும்


இதற்குப் பிறகு, தங்கப் பத்திரங்களின் (Sovereign Gold Bonds) அடுத்த தொடர் பிப்ரவரி 12-16 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் சார்பாக RBI தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது. இவற்றை நாட்டில் வசிக்கும் தனிநபர்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUF), அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்க முடியும்.


மேலும் படிக்க | முக்கிய செய்தி: டிசம்பர் 31 முதல் முன்பு போல Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது


Sovereign Gold Bond-களின் நன்மைகள் என்ன?


1. ஆண்டுக்கு 2.5% வட்டி, அரையாண்டுக்கு வட்டி
2. ஜிஎஸ்டியின் கீழ் வராது, தங்கத்தின் மீது 3% ஜிஎஸ்டி
3. தங்கப் பத்திரத்திற்கு மாற்றும் வாய்ப்பு
4. பத்திரத்தின் மீது கடன் வாங்குவதற்கான வாய்ப்பு 
5. தூய்மைக்கான உத்தரவாதம்
6. முதிர்வுக்குப் பிறகு வரி இல்லை
7. வீட்டில் வைத்து பாதுகாக்கும் தொல்லை இல்லை


Sovereign Gold Bond: தங்கப் பத்திரத்தின் மீதான வரி?


- 8 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெறுவதற்கு மூலதன ஆதாய வரி இல்லை
- தங்கப் பத்திரத்தின் மீதான வட்டித் தொகைக்கு வரி விதிக்கப்படும்
- முதிர்வுக்கு முன் திரும்பப் பெறுவதற்கு மூலதன ஆதாய வரி (Capital Gain Tax)
- பத்திரப் பரிமாற்றத்தில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மீதான குறியீட்டு நன்மை


Sovereign Gold Bond: தங்கப் பத்திர விலைகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன?


- 999 தூய்மையான தங்கத்தின் சராசரி இறுதி விலை
- வெளியீட்டிற்கு முந்தய IBJA இன் 3 நாள் சராசரி விலையின் அடிப்படையில்


மேலும் படிக்க | தபால் அலுவலகத்தின் அட்டகாசமான திட்டம்: சில மாதங்களில் டபுள் வருமானம், வட்டியிலேயே பம்பர் லாபம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ