இந்தியன் ரயில்வேயின் புதிய விதி அமல்.. பயணிகளே உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
Railway QR Code Payments: புதிய நிதியாண்டு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், தற்போது ரயில்வே துறை மிக முக்கிய மாற்றத்தை செய்ய உள்ளது. இந்த விதியைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Indian Railways Rules Change: இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது ரயில்வே துறைதான். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்து வருகிறார்கள். ரயில்களில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
ரயில்களின் பாதுகாப்பு வசதியாக இருக்கட்டும், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் சவுகரியங்கள் ஏற்படுத்தி கொடுப்பதாக இருக்கட்டும் என தொடர்ந்து ரயில்வே பல்வேறு அப்டேட்களை மேற்கொண்டு வருகிறது. ரயில்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் உள்ளன. அந்தவகையில் இந்திய ரயில்வே தற்போது புதிய விதி ஒன்று அமலுக்கு கொண்டு வந்துள்ளது அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
இந்நிலையில் நேற்று முதல் இந்தியன் இரயில்வே தரப்பில் இருந்து ரயில் பயணிகளுக்கு சில புதிய வசதியை வி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பணம் செலுத்துவது தொடர்பானது. அந்தவகையில் தற்போது ரயில் பயணிகளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் QR ஸ்கேன் மூலம் டிக்கெட்களுக்கான கட்டணத்தை செலுத்தும் புதிய முறை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தாலும்.
மேலும் படிக்க | வங்கி FD மீதான வட்டி விகிதங்கள் 10% என்ற அளவை தொடுமா.. நிபுணர்கள் கூறுவது என்ன!
டிக்கெட் கவுண்டரில் ஆன்லைனிலும் பணத்தை செலுத்தலாம்:
இந்நிலையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) இந்தியாவில் உள்ள அணைத்து ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் புதிய கட்டண முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் இனி QR ஸ்கேன் மூலமும், UPI பேமெண்ட்ஸ் ஆப்ஸ் மூலமாகவும் கட்டணம் செலுத்தும் முறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்யதுள்ளது. IRCTC ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு UPI மூலம் பணம் செலுத்தும் முறையை நடைமுறையில் வைத்துள்ளது. இப்போது, பொது வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கும் UPI மூலம் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. UPI பேமெண்ட் என்று கூறுகையில், இந்திய ரயில்வே இப்போது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடியம் (Paytm) ஆப்ஸ்கள் மூலம் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட் கவுன்டர்களுடன், QR ஸ்கேன் வசதி பார்க்கிங் மற்றும் உணவு கவுண்டர்களில் வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நேரம் குறையும். எனினும், ரொக்கமாக காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் பழைய கட்டண முறையையும் IRCTC தொடர்ந்து வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ