பெண் குழந்தைகளுக்கு சிறந்த சேமிப்பு திட்டம்! இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியதோடு கணக்கை தொடங்கலாம்.
அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்கால நலனுக்கென பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது, அரசின் உத்தரவாதத்துடன் கூடிய இந்த சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கப்பெறும். அப்படி அரசு வழங்கக்கூடிய சிறப்பான சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டமும், இந்தத் திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பும் பெற்றோருக்கானது. இத்திட்டத்தில் மொத்த வட்டி விகிதம் 7.6% ஆக உள்ளது, இதில் வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் இந்த எஸ்எஸ்ஒய் திட்டமானது மற்ற சிறு சேமிப்பு திட்டங்களை விட சிறந்த வருமானத்தை அளிக்கிறது மற்றும் பணத்திற்கு ஆபத்து இல்லாதது ஆகும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.49,420 அதிகரிக்க வாய்ப்பு!
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியதோடு கணக்கை தொடங்கலாம். அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும் அந்த பெண் குழந்தை கணக்கை நிர்வகித்து கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை திறக்கலாம், ஒருவேளை மூன்று பெண் குழந்தைகள் பிறந்தால் இந்த திட்டத்தில் இரண்டு கணக்குகளுக்கு மேல் திறந்து கொள்ளலாம். இந்த கணக்கை நீங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகம் இரண்டிலும் திறந்து கொள்ளலாம், இந்த திட்டத்தில் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும்.
எஸ்எஸ்ஒய் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.250 மற்றும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம், இதில் நீங்கள் கணக்கை சரியாக பராமரிக்கவில்லையென்றால் உங்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ரூ. 250 + ரூ.50 செலுத்தி, கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் முடிவதற்குள் தவறிய கணக்கை மீட்டெடுக்கலாம். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80சி-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.250-ல் கணக்கைத் தொடங்கி, முதல் மாதம் ரூ.750-ஐத் தொடர்ந்து மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால், உங்கள் மொத்த டெபாசிட் தொகை ரூ.12,000 ஆக இருக்கும். உங்கள் பெண் குழந்தை பிறந்த பிறகு இந்த கணக்கை திறந்தால் அந்த பெண்ணின் 21 வயதில் மொத்த முதலீடு ரூ. 1,80,000 ஆக இருக்கும் மற்றும் வட்டியுடன் சேர்த்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை ரூ.5,27,445 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கிய முக்கிய செய்தி, கட்டாயம் படிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ