இந்தியா, முன்பு இருந்ததை விட பல மைல் தூரம் முன்னேறி இருக்கிறது. முன்னர், பலர் 9-5 வேலைக்கு செல்லவே விரும்பினர். ஆனால், கடந்த சில வருடங்களாக பலர் சுயமாக தொழில் தொடங்க ஆரம்பித்திருக்கின்றனர். இதனால், ஒவ்வாெருவரின் தனி நபர் வருமானம் அதிகரிப்பது மட்டுமன்றி, ஒட்டு மொத்த நாட்டின் வருமானமும் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட துறை என்று மட்டுமன்றி, பலர் தங்களக்கு கற்பிக்கப்படாதவற்றையும் கற்றுக்கொண்டு அதில் முதலாளிகளாக மாறுகின்றனர். விவசாயத்தில் 0 அனுபவங்கள் இருப்பவர்கள் கூட, ஆர்கானிக் ஃபார்மிங் பற்றி படித்து விட்டு, அது குறித்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு தொழில் குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாம்பழ வியாபாரம்:


வெயில் சீசனையும், மாம்பழத்தையும் பிரிக்கவே முடியாது. இதனை, பழங்களின் ராஜா என்று கூட நாம் கூறுவதுண்டு. இனிப்பு, புளிப்பு போன்ற சுவை கலந்த இந்த மாம்பழத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல பல உலக நாடுகளிலும் விரும்பி சாப்பிடும் பல மில்லியன் மக்கள் இருக்கின்றனர். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பழங்களுள், மாம்பழமும் ஒன்று. உள்நாட்டு உற்பத்தி மூலமாகவே பல லட்சங்கள் வரை வருமானம் பெற வைக்கும் இந்த மாம்பழ வியாபாரம், வெளிநாட்டு உற்பத்தியிலும் கை நிறைய வருமானத்தை ஈட்டித்தருகிறது. 


மாம்பழ விற்பனையால் வருமானம் ஈட்டுவது எப்படி?


>வளரும் டிமாண்ட்: ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட தரவு ஒன்றில், உலகளவில் மாம்பழத்திற்கு தேவை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேவை, 2028ஆம் ஆண்டு வரை வளரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 


>இந்தியாவில் சந்தையாளர்கள்: மாம்பழ ஏற்றுமதியை பொறுத்தவரை, இந்தியாவிற்கு அதில் பல லட்சங்கள் லாபம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா, உலகளவில் பல நாடுகளுக்கு மாம்பழத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாக இருக்கிறதாம். ஆகையால், இந்த மாம்பழ உற்பத்தி தொழில் கண்டிப்பாக லாபகரமாக இருக்கும் என பலர் நம்புகின்றனர். 


இந்தியாவில் மாம்பழ உற்பத்தி அதிகமாக இருக்கும் இடம்:


இந்தியாவில் மொத்தம் 4 மாநிலங்கள் மாம்பழத்தை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், பிகார், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவைதான் அந்த மாநிலங்கள். இவை, 60 சதவிகித மாம்பழ உற்பத்தியை பார்த்துக்கொள்கின்றன. இந்தியாவில் மொத்தம் 1,500 வகை மாம்பழங்கள் வளர்க்கப்படுவதாகவும், அதில் 1000 வகை மாம்பழங்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!


மாம்பழம் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன?


>அமெரிக்கா
>ஜப்பான்
>நியூசிலாந்து
>ஆஸ்திரேலியா
>தென் ஆப்ரிக்கா
>சவுதி அரேபியா
>ஏமன்
>நெதர்லாந்து



மாம்பழ தொழில் தொடங்குவது..


மாம்பழ தொழிலை தொடங்குவதற்கு முதலில் அதற்கான தெளிவான திட்டத்தை வகுப்பதும் அதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பார்ப்பதும் மிகவும் முக்கியமாகும். இது, சீசனில் வருமானம் தரும் வியாபாரம் என்பதால், கண்டிப்பாக உரிய நேரத்தில் அறுவடை செய்யும் படி மாம்பழ சாகுபடி செய்ய வேண்டும்.


5 ஏக்கர் நிலப்பரப்பில் மாம்பழ சாகுபடி செய்கிறீர்கள் என்றால், அதிலிருந்து நீங்கள் குறைந்த பட்சம் 1.5  லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சம் 6 லட்ச ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என சில பொருளதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு வேலையாட்கள், பூச்சிக்கொல்லிகள், பாசன வசதி செய்யும் பொருட்கள் தேவைப்படலாம். எனவே, இந்த தொழிலின் மூலம் லட்சங்களில் வருமானம் வரும் என்றாலும், கண்டிப்பாக இதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரிடம் கலந்தாலோசித்த பிறகு இத்தொழிலை தொடங்குவது நல்லதாகும். 


மேலும் படிக்க | மொபைலில் E-Pancard ஈஸியா எப்படி டவுன்லோடு செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ