Mango: இளமையை காக்கும் மாம்பழத்தை தினமும் டயட்டில் சேர்க்கவும்

இது மாம்பழ  சீசன். அறுசுவையான மாம்பழத்தின் நன்மைகள் பல. இளைமையை காப்பது முதல் பல வகையில் உடலுக்கு நன்மை பயக்கிறது.

1 /5

மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இது உங்களை இளமையாக வைக்கும்.

2 /5

நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின், பி6 என்பது குறிப்பிடத்தக்கது.

3 /5

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்  அதிகம் உள்ள மாம்பழம்,  உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.

4 /5

மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திடும்.

5 /5

மாம்பழத்தில் அதிகமாக இரும்புச் சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.