எஸ்பிஐ மொபைல் பேங்கிங்: உங்கள் வங்கிக் கணக்கு பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். ஆம், மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதன்படி மொபைலில் இருந்து பணப் பரிமாற்றத்திற்கான கட்டணத்தை நீக்குவதாக எஸ்பிஐ தற்போது அறிவித்துள்ளது. யுஎஸ்எஸ்டி சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள் எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றி எளிதாகப் பரிவர்த்தனை செய்யலாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

45 கோடி வாடிக்கையாளர்களை எஸ்பிஐ வங்கி கொண்டுள்ளது
அனாஸ்ட்ராக்சர்ட் சப்ளிமென்ட்ரி சர்விஸ் டாடா பொதுவாக டாக்டைம் பேலன்ஸ் அக்கவுண்ட் டீடெயில்ஸ் சரிபார்க்கவும் மொபைல் வங்கி மூலம் பணத்தை மாற்றவும் பயன்படுத்தப்படுகிறது. வங்கியின் இந்த முடிவால் மொபைல் பேங்கிங் பயன்படுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். அத்துடன் நாடு முழுவதும் சுமார் 45 கோடி வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கொண்டுள்ளது.


மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?


கணக்கு தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப்பில் கிடைக்கும்
எஸ்பிஐ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,  'மொபைல் நிதி பரிமாற்றத்திற்கான எஸ்எம்எஸ் கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன! எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயனர்கள் எளிதாக பரிவர்த்தனை செய்யலாம். இது தவிர, வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வங்கி சேவையையும் தொடங்கியுள்ளது. இதன் உதவியுடன், அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்க்க நிகர வங்கியில் (எஸ்பிஐ நெட் பேங்கிங்) உள்நுழைய வேண்டிய அவசியமில்லை. கணக்கு தொடர்பான முழுமையான தகவல்கள் வாட்ஸ்அப்பில் மட்டுமே கிடைக்கும் என்று ட்விட் செய்து தெரிவித்துள்ளது.


அதேபோல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ இன் வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள். 


* முதலில், அக்கவுண்ட் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் தொலைபேசியில் மெசேஜ் விருப்பத்தைத் திறக்கவும்.
* மெசேஜில், கேப்ஷன் எழுத்தில் 'WAREG' என்று எழுதி, இடவெளி கொடுத்து கணக்கு எண்ணை (வங்கி அக்கவுண்ட் நம்பர்) உள்ளிடவும்.
* இந்த செய்தியை 7208933148 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்யவும்.
* இப்போது நீங்கள் 9022690226 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அப் செய்தியைப் பெறுவீர்கள்.
* மெசேஜைப் பெற்ற பிறகு உங்கள் ராஜிஸ்ட்ரேஷன் கன்ஃபர்ம் செய்யப்பட்டது. சேவையைப் பயன்படுத்த, அதில் HI என டைப் செய்யவும்.
* இதைச் செய்வதன் மூலம் உங்கள் சர்வீஸ் மெனு வாட்ஸ்அப்பில் திறக்கும்.
* நீங்கள் விரும்பும் எந்த தகவலையும், மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
* மெசேஜ் செய்து உங்கள் க்வேரி டைப் செய்யலாம். 


மேலும் படிக்க | மத்திய அரசுப் பணி! தமிழ்நாட்டில் அருமையான சம்பளத்தில் வேலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ