NRIகளுக்கு சேவை வழங்க 30 நாடுகளுடன் இணைந்துள்ள SBI வங்கி!

SBI YONO குளோபலின் 'ஒன் வியூ' அம்சம், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் தங்கள் உள்நாட்டு எஸ்பிஐ கணக்குகளை ஆப் மூலம் பார்க்க அனுமதிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 15, 2022, 07:08 PM IST
  • SBI வங்கியின் டிஜிட்டல் செயலியான YONO வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பான செயலி.
  • 'ஒன் வியூ' அம்சத்தின் மூலம் உள்நாட்டு எஸ்பிஐ கணக்கு குறித்த தகவல்களை NRIக்கள் அறிந்து கொள்ளலாம்
  • பேக்கிங் துறைகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
NRIகளுக்கு சேவை வழங்க 30 நாடுகளுடன் இணைந்துள்ள SBI வங்கி! title=

பாரத ஸ்டேட் வங்கி இந்திய வங்கிகளில் முதலிடத்தில் உள்ளது. அதன் தனித்துவமான  சேவைகள் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது கருதப்படுகிறது. இப்போது இந்த அமைப்பு ஒரு படி மேலே சென்று வெளிநாடுகளில் வாழும் இந்திய வெளிநாட்டவர்களுக்கு வங்கிச் சேவைகளை அணுகுவதற்கான சிறந்த தளத்தை உருவாக்கி வருகிறது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி 30 நாடுகளில் வெளிநாட்டு அலுவலகங்களையும், 232 வெளிநாட்டு அலுவலகங்களுடன் ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது.

SBI வங்கியின் டிஜிட்டல் செயலியாப்ன YONO என்பது SBI வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் சிறந்த பாதுகாப்பான செயலியாகும். யோனோ குளோபலின் 'ஒன் வியூ' அம்சம், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் தங்கள் உள்நாட்டு எஸ்பிஐ கணக்குகளை, ஆப் மூலம் பார்க்க அனுமதிக்கிறது.

சுமார் 30.56 பில்லியன் டாலர் என்ஆர்ஐ வைப்புத் தொகையுடன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, உலகம் முழுவதும் உள்ள இந்தியாவின் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது சுமார் 37 லட்சம் NRI வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 436 பிரத்யேக  கிளைகளுடன் நன்கு கட்டமைக்கப்பட்ட உலகளாவிய இருப்பை வெளிப்படுத்துகிறது.

மேலும் படிக்க | NRI சூப்பர் செய்தி: மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

எஸ்பிஐ வங்கி, 45 பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள ஐந்து வங்கிகளுடன் என்ஆர்ஐகளுக்கு பணம் அனுப்பும் வகையில் இணைந்துள்ளது. கூடுதலாக, என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு நிதி அல்லாத சேவைகளை வழங்குவதற்காக எர்ணாகுளத்தில் உலகளாவிய என்ஆர்ஐ மையத்தை வங்கி அமைத்துள்ளது.

NRI வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வங்கி பல்வேறு கணக்கு சலுகைகளை வழங்குகிறது. FCNR (B) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன, இதன் விளைவாக NRI களுக்கு அதிக நன்மைகள் கிடைத்துள்ளன. NRI வாடிக்கையாளர்களுக்கு, SBI Quick App ஆனது மிஸ்டு கால் அல்லது SMS மூலம் இருப்பு தொகை குறித்த தகவல், மினி ஸ்டேட்மெண்ட் போன்ற சேவைகளை வழங்குகிறது.

ஒரு நாளைக்கு $25,000 (NRE கணக்கு) USD, GBP, EUR, SGD, AUD, CAD மற்றும் NZD நாணயங்களில் 214 நாடுகளுக்கு ரூ. 18 லட்சத்தில் இருந்து பணத்தை எடுக்கும் வரம்பை அதிகரிப்பதன் மூலம் இணைய வங்கி மூலம் Fx-அவுட்டில் பணம் அனுப்ப அனுமதி அளிக்கிறது. ட்விட்டரில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள், இன்ஸ்டாகிராமில் 2.2 மில்லியன் பின்தொடர்பவர்கள், யூடியூப்பில் 4.15 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் லிங்க்ட்இனில் கிட்டத்தட்ட 2.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் எஸ்பிஐ வலுவான சமூக ஊடக இருப்பைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | தேர்வு இல்லை..விண்ணப்ப கட்டணம் இல்லை..எஸ்பிஐ வங்கியில் வேலை!

மேலும் படிக்க | இந்தியாவிற்கு இன்று 75வது சுதந்திர தினமா? அல்லது 76? குழப்பங்களுக்கு எளிய விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News