உங்கள் வங்கி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? சரிபார்க்க எளிய வழிகள்!
வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, சில எளிய வழிமுறைகள் உள்ளது, அதனை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் தான் ஆதார் அட்டை. ஆதார் அட்டையை இந்தியாவில் வசிக்கும் குடிமகன்கள் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களின் டிஜிட்டல் ஐடி ஆகும், மேலும் இது நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்புக்கான ஒரே ஆதாரமாக செயல்படுகிறது. தனிநபரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களையும், கைரேகை, கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களையும் இந்த ஆதார் அட்டை கொண்டுள்ளது. மின்னணு அல்லது ஆஃப்லைன் சரிபார்ப்பு மூலம் தங்களுடைய அடையாளச் சான்றுகளைச் சரிபார்க்கவும் இந்திய குடிமகன்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். குடிமகன்களிடம் இருக்கக்கூடிய அனைத்துவிதமான ஆவணங்களிலும் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது.
மேலும் படிக்க | ரயில் பயணிகளே இதையெல்லாம் கொண்டு போகாதீங்க... அப்புறம் போலீஸ் கேஸ் தான்!
பணமோசடி தடுப்பு மூன்றாவது திருத்த விதிகள், 2019-ன் படி, ஆதார் பிரிவு 7-ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஏதேனும் திட்டத்தின் கீழ் ஏதேனும் நன்மை அல்லது மானியம் பெற விரும்பினால் சட்டம், வங்கி சேவை வழங்குநரிடம் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிற வங்கி சேவைகளுக்கு, ஆதார் அட்டை ஒரு விருப்பமான கேஒய்சி ஆவணமாக செயல்படுகிறது. இருப்பினும், நீங்கள் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க விரும்பவில்லை என்றால், இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்து கொள்ளாலாம். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அரசாங்கம் வழங்கக்கூடிய மானியங்களை இதுவரை பெறாத இந்திய குடிமக்கள், வங்கி கணக்குகளை தொடங்க வங்கியில் ஆதார் அட்டையை முக்கியமான ஆவணமாக சமர்பிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளது.
உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி தெரிந்துகொள்ளலாம்.
1) இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2) 'எனது ஆதார்' என்கிற டேப்பை கிளிக் செய்து, கீழே தோன்றும் மெனுவிலிருந்து 'ஆதார் சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3) 'ஆதார் சேவைகள்' என்கிற பிரிவின் கீழ், 'ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு இணைக்கும் நிலையை சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4) இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அந்த புதிய பக்கத்தில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணையும், திரையில் காட்டப்படும் பாதுகாப்புக் குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.
5) 'சென்ட் ஓடிபி' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி எண்ணை உள்ளிட வேண்டும்.
6) ஓடிபி-ஐ உள்ளிட்டதும், 'லாக் இன்' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு இணைப்பின் நிலையைப் பார்க்க முடியும்.
மாற்றாக நீங்கள் உங்கள் நெட் பேங்கிங் வங்கிக் கணக்கில் லாக் இன் செய்வதன் மூலமாகவோ அல்லது உங்கள்ள அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு நேரில் சென்று வங்கி அதிகாரிகளிடம் விசாரிப்பதன் மூலமாகவோ உங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை இணைக்கும் நிலைகளை நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
1) உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் அல்லது அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டும்.
2) வங்கியில் உங்கள் ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டும்.
3) ஆதார் இணைப்புக்கான படிவத்தை நிரப்ப வேண்டும்.
4) வங்கி உங்கள் ஆதார் விவரங்களை யூஐடிஏஐ உடன் சரிபார்த்து, உங்கள் வங்கிக் கணக்குடன் உங்கள் ஆதாரை இணைக்கும்.
மேலும் படிக்க | Income Tax Rules: இனி இந்த ஆவணம் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ