இந்திய பங்குச் சந்தைகள் நிபுணர்களின் கணிப்பிற்கேற்ப நேற்று ஏற்றத்துடன் துவங்கி ஏறிய நிலையிலேயே முடிந்தன. ஆசிய சந்தைகளில் காணப்பட்ட அனுகூலமான சூழல் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. இன்றும் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை பங்குச்சந்தையான Sensex, நேற்று 511 புள்ளிகள் அதிகரித்து 37,930 என்ற நிலையிலும் தேசிய பங்குச்சந்தையான Nifty 140 புள்ளிகள் அதிகரித்து 11,162 என்ற நிலையிலும் நிறைவடைந்தன.


Nifty-ஐ பொறுத்தவரை 11,000 ஒரு மிகப்பெரிய குறியீட்டு அறிகுறியாக பார்க்கப்பட்டது. இந்த நிலை கடக்கப்பட்டால், பின்னர் ஏறுமுகம் இருக்கும் என்ற கருத்து சந்தையில் நிலவிய நிலையில், தற்போது இந்த நிலை கடக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து இது தக்கவைக்கப்படுவதால், வரும் நாட்களில் ஏறுமுகமே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


இன்றைய நிலவரத்தைப் பார்த்தால் சிங்கப்பூர் பங்குச்சந்தையான SGX Nifty துவக்கத்தில் அதிக ஏற்றமோ சரிவோ இல்லாமல் ஃப்ளாட்டாக துவங்கியது. பின்னர் அக்குறியீடு குறையத் தொடங்கியது. இந்திய குறியீடுகளும் அதை பிரதிபலிக்கும் வண்ணம் இருக்லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. SGX Nifty எப்போதும் நம் இந்திய பங்குச்சந்தைகளின் துவக்கத்திற்கு ஒரு பெரிய முன்மாதிரியாக இருக்கும் ஒரு குறியீடாகும்.


இன்றும் இந்த வாரமும் வலுவான வாங்கும் திறன் கொண்ட பங்குகளாக நிபுணர்கள் கொடுத்துள்ள Stock Tips பின்வருமாறு:


IOC, Tata Motors, SBIN, BPCL, ONGC, NTPC, Reliance


தவிர்க்க வேண்டிய Stocks:


Bajaj Finance, Bharti Infratel Limited


இந்த மாதம் காலாண்டு முடிவுகள் வரவிருக்கும் நிறுவனங்கள்:


ஜூலை 22: Bajaj Auto, Bajaj Holding


ஜூலை 23: Biocon, HDFC AMC, SKF Indj


ஜூலை 24: Ambuja Cements, Asian Paints


ஜூலை 25: ICICI Bank


ஜூலை 29: Dr.Reddy, Glaxo Smilthkline Pharma


ஜூலை 30: Chola Fin, Dabur


FTA எனப்படும் வெளிநாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் பல மாற்றங்களை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பல நிறுவன செயல்முறைகளிலும் பல மாறுபாடுகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அனைத்து FTA-க்களும் நமக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் நேற்று  தெரிவித்துள்ளார்.


எனினும், இன்னும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் சீரடையாத நிலையில் இருப்பதாலும், தடுப்பு மருந்து குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் முழுவதுமாக வரவில்லை என்பதாலும், பங்குகள் வாங்கி விற்பதில் கவனம் தேவை. பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் வரவுள்ள நிலையில், நிறுவனங்களின் நிலை மற்றும் அவற்றின் செயலாக்கத்தைப் பார்த்து பங்குகளை வாங்குவது நல்லது.