கடந்த ஐந்து மாதங்களில் மானிய விலையில் சமையல் எரிவாயு (LPG) விலை சிலிண்டருக்கு ₹35.55 அதிகரித்துள்ளது என்று எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசாங்கக் கொள்கையின்படி, நாடு முழுவதும் LPG சந்தை விலையில் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஒரு வருடத்தில் மானிய விலையில் தலா 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களை வாங்குவதற்கு வீடுகளுக்கு உரிமை உண்டு. சந்தை விலையில் LPG வாங்க பயனாளிகள் பயன்படுத்தும் வங்கி கணக்குகளுக்கு அரசாங்கம் மானியத் தொகையை நேரடியாக மாற்றுகிறது. மானிய விலையில் LPG விலை அக்டோபர் முதல் சிலிண்டருக்கு ₹35.55 அதிகரித்துள்ளது. 


மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், டெல்லியில் உள்நாட்டு மானியத்துடன் கூடிய LPG 2019 அக்டோபர் 1 ஆம் தேதி சிலிண்டருக்கு ₹ 538.95 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த மாதம் இதன் விலை ₹574.50 ரூபாய். எனினும் அவர் விலை உயர்வுக்கு எந்த காரணமும் குறிப்பிடவில்லை.


மானியமற்ற அல்லது சந்தை விலையுள்ள LPG சர்வதேச விகிதங்களின் அடிப்படையில் மாதந்தோறும் மாறுபடும் அதே வேளையில், மானிய விலையில் LPG விலைகள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டருக்கு ₹4 மற்றும் வரிகளால் உயர்த்தப்படுகின்றன. எவ்வாறாயினும், இந்த விகிதங்கள் எண்ணெய் சந்தை நிறுவனங்களால் வெளியிடப்படவில்லை. 


அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மானிய விலையில் எரிவாயு விலையை வெளியிடுவதை நிறுத்திவிட்டதா என்ற கேள்விக்கு, மானியமில்லாத உள்நாட்டு LPG-ன் விலை எண்ணெய் நிறுவனங்களின் வலைத்தளங்களில் கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பிரதான், மானியமில்லாத LPG சிலிண்டருக்கு ₹805.50 ரூபாய் செலவாகும் என்று தெரிவித்த அவர், வீட்டு நுகர்வோர் 14.2 கிலோ சிலிண்டருக்கு ₹231 மானியம் பெறுகின்றனர், என்றார். எனவே, ஒரு வீடு LPG-யை சிலிண்டருக்கு ₹805.50-க்கு வாங்குகிறது. அவர் அல்லது அவள் அரசாங்க மானியமாக பெறும் ₹231-ஐக் கணக்கிட்ட பிறகு, செலுத்துதல் ₹574.50 ஆகும். "நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தையில் அந்தந்த பொருட்களின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.