பெண்களுக்கான சூப்பர் சேவிங்ஸ் திட்டம்! மகிளா சம்மான் சேமிப்பு சர்டிபிகேட் 7.5% வட்டி
Compound Interest In Mahila Samman Savings Certificate: ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு 32 ஆயிரத்து 44 ரூபாய் வட்டி கிடைக்கும்
இந்த ஆண்டு, பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்ற சிறப்புத் திட்டத்தை மோடி அரசு தொடங்கியுள்ளது. இது 7.5 சதவிகிதம் வட்டி தருவதுடன் கூட்டுப் வட்டியையும் பெறுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற திட்டத்தை அறிவித்தார். இது பெண்களுக்கான சிறந்த சிறுசேமிப்பு திட்டமாகும்.
2 ஆண்டுகளாக தொடங்கப்பட்ட சிறந்த முதலீட்டு திட்டங்களில் இதுவும் ஒன்று. குறுகிய கால திட்டமான இது, பெண்களுக்கான ஒரு சிறந்த திட்டமாகும், இதில் நல்ல வருமானத்துடன், கூட்டு வட்டியின் பலனும் கிடைக்கிறது. ஒரு பெண் முதலீட்டாளர் இந்தத் திட்டத்தில் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு 32 ஆயிரத்து 44 ரூபாய் வட்டி கிடைக்கும்.
குறைந்தபட்சம் 100 ரூபாய் டெபாசிட் செய்யலாம்
இந்தத் திட்டத்தில் குறைந்தது 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதன் பிறகு ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சம். இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த திட்டத்தில் 2025 மார்ச் 31 வரை முதலீடு செய்யலாம். ஒரு பெண்ணின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருக்கலாம். ஆனால், இரண்டு கணக்குகளைத் திறப்பதற்கு இடையே குறைந்தது 3 மாத இடைவெளி அவசியம்.
7.5 சதவீத வட்டி கிடைக்கும்
வட்டி விகிதம், பிற திட்டங்களுடன் ஒப்பிடும்போது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் 7.5 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. வட்டி 2 ஆண்டுகளுக்குப் பிறகு செலுத்தப்படுகிறது, ஆனால் காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்கி கணக்கிடப்படுகிறது.
வரி கணக்கீடு பற்றி பேசுகையில், உங்கள் மொத்த வருமானத்தில் வட்டித் தொகை சேர்க்கப்படும் மற்றும் விதிக்கப்படும் வரி, ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப விதிக்கப்படும். டிடிஎஸ் பற்றி பேசினால், அஞ்சலகத்திலிருந்து வரும் 40 ஆயிரம் வரையிலான வட்டி வருமானம் டிடிஎஸ் வரம்பிற்குள் வராது.
தனியார் வங்கிகளும் அனுமதி பெற்றன
இந்தத் திட்டத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதைக் கண்டு, அரசாங்கம் சமீபத்தில் இதன் விதியை மாற்றியுள்ளது. இப்போது பொதுத்துறை வங்கிகளைத் தவிர, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கிகளிலும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கு தொடங்கலாம்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ