Bank Locker Guidelines: 6 மாதங்களில் RBI வழங்க வேண்டும்-SC
6 மாதங்களில் வங்கிகளில் லாக்கர் பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது...
புதுடெல்லி: வங்கிகளில் லாக்கர் வசதி மேலாண்மை தொடர்பான விதிமுறைகளை ஆறு மாதங்களுக்குள் கொண்டு வருமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. லாக்கரின் செயல்பாடு தொடர்பான விஷயத்தில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவான விஷயங்களை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியுள்ளது.
நீதிபதி எம்.எம்.சந்தனகவுதர் மற்றும் நீதிபதி வினீத் சரண் ஆகியோர் அடங்கிய சட்டமன்ற அமர்வு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. உலகமயமாக்கலுக்கு (globalization) பிறகு, மக்களின் வாழ்வில் வங்கி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார பரிவர்த்தனைகளின் அதிகரிப்பே இதற்கு காரணம்.
நாம், இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருவதால், மக்கள் சொத்துக்களை (பணம், நகைகள் போன்றவை) வீடுகளில் வைக்க தயங்குகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 'இதன் மூலம், வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவை அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த வகை சேவைகளை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் பெறலாம். எலக்ட்ரானிக் முறையில் இயங்கும் லாக்கருக்கு வழி இருந்தாலும், அதை மோசடி செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்’ என்று நீதிமன்றம் கூறியது.
எலக்ட்ரானிக் முறையில் லாக்கர்களை இயக்கும்போது, அதை சீர்குலைப்பவர்கள் மோசடி செய்ய வாய்ப்பிருப்பதாக உச்ச நீதிமன்றம் (Supreme Court) கருதுகிறது. மக்கள் அனைவருக்கும் தொழில்நுட்ப ரீதியாக தெரியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என்னும்போது, எலக்ட்ரானிக் லாக்கரை இயக்குவதில் சிக்கல்கள் எழலாம் என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
Also Read | இன்னும் 15 நாட்களில் Electric tractor அறிமுகப்படுத்தப்படும்: Nitin Gadkari!
வாடிக்கையாளர்களுக்கு வங்கி பொறுப்பு
வாடிக்கையாளர்கள் தங்கள் சொத்தை பாதுகாக்க மிகவும் திறமையாக செயல்படும் வங்கிகளையே முழுமையாக நம்பியிருக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் கூறியது. "இதுபோன்ற சூழ்நிலையில், வங்கிகள் பின்வாங்க முடியாது, மேலும் லாக்கரை இயக்கும் விஷயம் தொடர்பாக தங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை என்று கூற முடியாது" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"வங்கிகளின் இத்தகைய நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பொருத்தமான விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும், வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற நமது நம்பகத்தன்மையையும் சேதப்படுத்துகிறது" என்று நீதிமன்றம் தெரிவித்தது. "எனவே, ரிசர்வ் வங்கி ஒரு விரிவான வழிகாட்டுதலைக் கொண்டுவர வேண்டியது அவசியம், இது லாக்கரின் தொடர்பாக வங்கிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான அடிப்படையாக இருக்கும்"
வங்கிகள், தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஒருதலைப்பட்ச மற்றும் நியாயமற்ற நிபந்தனைகளை விதிக்கின்றன. "இதைக் கருத்தில் கொண்டு, இந்த உத்தரவு வெளியான ஆறு மாதங்களில், லாக்கர் தொடர்பான பொருத்தமான விதிகளை ரிசர்வ் வங்கி உருவாக்க வேண்டும்."
Also Read | DRDO தயாரித்த ஹெலினா, துருவாஸ்திரா ஏவுகணைகள் விரைவில் ராணுவத்தில் இணைகிறது.!!
கொல்கத்தாவைச் சேர்ந்த அமிதாப் தாஸ்குப்தாவின் முறையீடு
கொல்கத்தாவைச் சேர்ந்த அமிதாப் தாஸ்குப்தா என்பவரின் மேல்முறையீட்டின் பேரில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற அமர்வு வெளியிட்டது. தேசிய நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்தின் (National Consumer Disputes Settlement Commission) உத்தரவுக்கு எதிராக தாஸ்குப்தா மேல்முறையீடு செய்தார்.
மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்த அவர், லாக்கரில் வைத்திருந்த ஏழு நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டார். அல்லது அதற்கான மதிப்பு மற்றும் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
United Bank of India லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை எடுக்கும்போது நுகர்வோர் மன்றத்தின் அதிகார வரம்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற மாநில ஆணையத்தின் உத்தரவை தேசிய நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம் ஏற்றுக்கொண்டது.
ALSO READ | இனி Paytm மூலமும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் - இங்கே செயல்முறை!
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR