இனி நோ டென்ஷன், கையில் வாங்கும் சம்பளம் இனி குறையாது!
புதிய ஊதிய விதி (New Wages Rules) அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட உள்ளதால் உங்கள் கையில் வாங்கும் சம்பளத்தில் இப்போதைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
புது டெல்லி: நாடாளுமன்றத்தில் புதிய ஊதியக் குறியீட்டை மத்திய நிறைவேற்றியிருந்தது. அதன்படி, 2021 ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் எனவும், இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது.
அதிகரித்து வரும் கொரோனா (Coronavirus) பாதிப்பை கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் புதிய ஊதிய விதியை அமல்படுத்துவது சற்று சிரமமாக இருந்தது.
புதிய ஊதிய விதி:
புதிய தொழிலாளர் விதியின் (New Wage Rule) படி, அடிப்படை சம்பளத்தின் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 50%-க்கு குறைவாக இருந்தால் அவை விரைவில் மாறிவிடும், மேலும் உங்களது அடிப்படை சம்பளத்துடன் சிடிசி (CTC) மேலும் அதிகரிக்கும்.
இந்தப் புதிய ஊதிய விதி அமலுக்கு வந்த பிறகு ஊதிய கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்தப் புதிய ஊதிய விதி அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் அளவு வெகுவாகக் குறையும்
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையால் இந்த புதிய ஊதிய விதி அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் தரப்பிலும் இதற்கு கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. எனவே இப்போதைக்கு, ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கருதப்படுகிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR