ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!
Air India Reduces FREE Baggage Limit: டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
Air India Reduces FREE Baggage Limit: டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது. விமான போக்குவரத்துத் துறையில் அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப விமான கட்டணத்தை உயர்த்துவது இயல்பு. ஆனால் தற்போது விமான நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் பயணிகளுக்கான பல சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இலவச லக்கேஜ் வரம்பு
பொதுவாக, மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பயணிகள், அதிக அளவிலான லக்கேஜ்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. எனினும், இனி பயணிகள் இனி 15 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை மட்டுமே இலவசமாக எடுத்துச் செல்ல முடியும். ஏர் இந்தியா இலவச லக்கேஜ் வரம்பை 20 கிலோவிலிருந்து 15 கிலோவாக குறைத்துள்ளது. புதிய இலவச லக்கேஜ் வரம்பு மே 2 முதல் அமலுக்கு வந்துள்ளது. பயண முகவர்களுக்கான அறிவிப்பில், 'எகானமி கம்ஃபோர்ட்' மற்றும் 'கம்ஃபோர்ட் பிளஸ்' கட்டண வகைகளின் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள் இனி 15 கிலோ செக்-இன் சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா இப்போது டாடா குழும நிறுவனமாகும். டாடா குழுமம் ஏர் நிதியா நிறுவனத்தை 2022ம் ஆண்டு அரசாங்கத்திடம் இருந்து வாங்கியது. டாடா இதனை கையகப்படுத்துவதற்கு முன், ஏர் இந்தியாவில் இலவச லக்கேஜ் வரம்பு 25 கிலோ என்ற அளவில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இந்த வரம்பு 20 கிலோவாக குறைக்கப்பட்டது.
மேலும் படிக்க | விஸ்தாரா நெருக்கடி... 10% விமானங்கள் ரத்து... சிக்கலில் விமான பயணிகள்!
25 கிலோ லக்கேஜ் எடுத்து செல்லும் வழிமுறை
'எகானமி ஃப்ளெக்ஸ்' பிரிவின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏர் இந்தியா 25 கிலோ வரை லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதிக்கும். இது தவிர, இந்த டிக்கெட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை உள்ளிட்ட சில வசதிகளை விமான நிறுவனம் வழங்குகிறது. டெல்லி-மும்பை போன்ற வழித்தடங்களில் ஏர் இந்தியாவின் 'கம்ஃபோர்ட் பிளஸ்' மற்றும் 'ஃப்ளெக்ஸ்' டிக்கெட்டுகளின் கட்டணம் சுமார் ரூ.1,000 அதிக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த அதிக கட்டணத்தின் மூலம், பயணிகள் 10 கிலோ கூடுதல் லக்கேஜ் அலவன்ஸ், அதிக லாயல்டி புள்ளிகள் மற்றும் இலவச இருக்கைகள் போன்ற பலன்களைப் பெறுகிறார்கள்.
டெல்லியில் இருந்து சூரிச்சிற்கு நேரடி விமான சேவை
ஜூன் 16 முதல் டெல்லியில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச்சிற்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து ஏர் இந்தியாவின் நேரடி விமானச் சேவையைப் பெறும் ஏழாவது ஐரோப்பிய நகரமாக சூரிச் இருக்கும். திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு என வாரத்தில் நான்கு நாட்கள் விமானங்கள் இயக்கப்படும். இந்த விமானத்திற்கு போயிங் 787 ரக விமானம் பயன்படுத்தப்படும். 'எகானமி' மற்றும் 'பிஸினஸ்' பிரிவுகள் இருக்கும். தற்போது, ஏர் இந்தியா, ஆம்ஸ்டர்டாம், கோபன்ஹேகன், பிராங்பேர்ட், மிலன், பாரிஸ் மற்றும் வியன்னா ஆகிய 6 நகரங்களுக்கு வாரந்தோறும் 60 விமானங்களை இயக்குகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வீல்சேர் பற்றாக்குறை... 80 வயது பயணி இறந்த சோகம்... ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ