ஒரே நாளில் 21 புதிய வணிக வாகனங்களை அறிமுகப்படுத்திய Tata Motors
டிரக்குகள், பேருந்துகள் உட்பட 21 புதிய வணிக வாகனங்களை ஒரே நாளில் அறிமுகப்படுத்தியது டாடா மோட்டர்ஸ்...
புதுடெல்லி: டாடா மோட்டார்ஸ், ஒரே நாளில் 21 வணிக வாகனங்களை அறிமுகம் செய்தது. நேற்று (அக்டோபர் 28, வியாழக்கிழமை) அதிரடியாக 21 புதிய வணிக வாகனங்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது.
டிரக்குகள், பேருந்துகள் உட்பட 21 புதிய வணிக வாகனங்கள் அறிமுகம், போக்குவரத்துத் துறையில் நல்ல வரவாக பார்க்கப்படுகிரது. சரக்கு உட்பட அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டாடா மோட்டர்ஸ் தனது மிகப் பெரிய வாகன வரிசையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனம் (M&HCV) பிரிவில் ஏழு, CNG பவர்டிரெய்னுடன் இடைநிலை மற்றும் இலகுரக வணிக வாகனம் (4-18 டன் GVW) பிரிவில் ஐந்து தயாரிப்புகளையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது.
இது தவிர, தொலைதூரப் பகுதிகளுக்கு பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்தவும், செயல்பாட்டுச் செலவைக் குறைக்கவும் நான்கு புதிய LCV (இலகு ரக வணிக வாகனம்) வாகனங்களையும் டாடா அறிமுகப்படுத்தியது. இ-காமர்ஸ் விநியோகத்தின் வளர்ந்து வரும் தேவைகளுக்காக பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய ஏஸ் மற்றும் விங்கர் கார்கோ வாகனங்களும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களில் அடங்கும்.
Read Also | உலகின் Cheapest Electric car Strom R3: அசத்தல் தோற்றம், அபாரமான அம்சங்கள்
மேலும், நகர போக்குவரத்து தேவைகளுக்காக பேருந்துகள் உட்பட ஐந்து வணிக வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வாகனங்கள் அறிமுகம் பற்றி பேசிய டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக், "இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் உள்கட்டமைப்பின் தடையற்ற வளர்ச்சிக்கு டாடா மோட்டர்ஸ் தொடர்ந்து பங்களித்து வருகிறது. உள்கட்டமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நுகர்வோரின் நுகர்வு மற்றும் இ-காமர்ஸ் ஆகியவை அவசியமானவை. வணிக வாகனங்களில் முன்னோடி நிறுவனமாக டாடா மோட்டர்ஸ் எப்போதுமே செயல்படும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புத்திசாலித்தனமான, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறோம்" என்று தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ள 21 புதிய வாகனங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து தேவைகளையும், அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Read Also | அசத்தலான டாப் கார்களின் விலை, அம்சங்களின் முழுமையான ஒப்பீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR