IRCTC Tatkal Ticket Booking at irctc.co.in : இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் நாம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்க முடியும். அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி படுக்கை வசதி வரை பல வசதிகள் இதில் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது நாம் இந்திய ரயில்வேயின் (INDIAN RAILWAY RULES) அப்படியொரு முக்கியமான விதியைப் பற்றி தான் காணப் போகிறோம். இதன் மூலம் நீங்கள் கட்டாயம் பயனடைவீர்கள்.


ரயிலில் கன்பர்ம் டிக்கெட்டைப் பெறுவது என்பது மிகவும் கடினமானதாகும். பல நேரங்களில், அவசரமாக கடைசி நேரத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் அல்லது காத்திருப்பு பட்டியல் டிக்கெட் உறுதியாகவில்லை என்றால், IRCTC இன் தட்கல் டிக்கெட் முன்பதிவு விருப்பம் தேர்ந்தெடுக்கலாம். இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் தளமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் முன்பதிவு அமைப்பு, கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டிய பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | விமான டிக்கெட்களை குறைந்த விலையில் பெறுவது எப்படி?


இந்நிலையில் இந்த தட்கல் டிக்கெட்டுகளை நீங்கள் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் பதிவு செய்துக்கொள்ளலாம். ஆனால் கன்பர்ம் தட்கல் டிக்கெட்டைப் பெறுவது சவாலான விஷயமாகும். எனவே ஐஆர்சிடிசியில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான முறையை தெரிந்துக்கொள்ளுங்கள்.


ஆன்லைனில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு நீங்கள் பின்வரும் படிகளை பின்பற்றவும் :


* IRCTC இணையதளத்திற்கு சென்று அதில் லாகின் செய்யவும். 
* அடுத்து “Book Ticket” என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து, “Tatkal” புக்கிங் என்பதை கிளிக் செய்யவும்.
* எங்கிருந்து பயணிக்க விரும்புகிறீர்கள், பயண தேதி, ரயில் மற்றும் வகுப்பு போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
* அதன் பிறகு பயணியின் விவரங்கள் மற்றும் பெர்த் விருத்தை உள்ளிடவும்.
* இதன் பிறகு பேமெண்ட் செலுத்தி, புக்கிங்கை உறுதி செய்யுங்கள்.
* பேமெண்ட் வெற்றிகரமாக செய்யப்பட்டதும் இ-டிக்கெட்டை டவுன்லோட் செய்துக் கொள்ளவும்.


IRCTC அப்ளிகேஷன் மூலம் எப்படி புக் செய்வது?


* உங்களுடைய ஸ்மார்ட்போனில் IRCTC அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துக்கொள்ளவும்.
* பிறகு அக்கவுண்டில் லாகின் செய்து, “Tatkal Booking” என்பதை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு நீங்கள் பயணிக்க விரும்பும் ரயில் தேதி மற்றும் பயணி விவரங்களை நிரப்பவும்.
* இருக்கை வகுப்பு மற்றும் பெர்த் வகையை தேர்வு செய்யவும்.
* ரயில் டிக்கெட்டிற்கான பேமெண்ட் செலுத்தி, பேமெண்ட் உறுதியான பிறகு டிக்கெட்டை டவுன்லோட் செய்யுங்கள்.


தட்கல் டிக்கெட் உறுதியாக பெற சில டிப்ஸ் :
தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பு விரைவான இன்டர்நெட் கனெக்சன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வார இறுதி நாட்களை காட்டிலும் பிற நாட்களை தேர்வு செய்து தட்கல் டிக்கெட் புக் செய்தால் உறுதியான டிக்கெட்டை பெறலாம். இந்த முக்கிய குறிப்புகளை பின்பற்றினால் தட்கல் புக்கிங் செய்து கடைசி நிமிடத்தில் கூட கன்பார்ம் டிக்கெட்டை பெறலாம்.


மேலும் படிக்க | ஸ்விகியுடன் கைக்கோர்த்த IRCTC! இதனால் பயணிகளுக்கு என்ன பயன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ