புதுடெல்லியில் இருந்து லக்னோ செல்லும் IRCTC-யின் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய் கிழமைகளைத் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ்(82502 ) ரயிலின் வழக்கமான சேவை அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.


இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆனது புதுடெல்லியில் இருந்து இரவு 03.35 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் இரவு 10.05 மணிக்கு லக்னோவை எட்டும். லக்னோ-புது தில்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் (82501) ரயிலின் வழக்கமான சேவை அக்டோபர் 6 முதல் தொடங்கும். இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவையானது லக்னோவிலிருந்து காலை 06.10 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் மதியம் 12.25 மணிக்கு புதுடெல்லியை அடைகிறது.


இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆனது ஒரு ஏசி நாற்காலி கார் மற்றும் ஒன்பது ஏசி நாற்காலி கார் பெட்டிகளை கொண்டிருக்கும், மேலும் இது கான்பூர் மற்றும் காஜியாபாத் நிலையங்களில் இரு திசைகளிலும் நிறுத்தப்படும். லக்னோவிலிருந்து டெல்லிக்கு செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸின் தொடக்க ஓட்டம் அக்டோபர் 4-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, அன்று ரயில் காலை 9.30 மணிக்கு லக்னோவிலிருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 4.00 மணிக்கு புதுடெல்லிக்கு வந்து சேர உள்ளது. 


இது பயணத்தின் போது கான்பூர் மற்றும் காசியாபாத் நிலையங்களில் நிறுத்தப்படும். ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, லக்னோவிலிருந்து புதுடெல்லி மற்றும் சனிக்கிழமை (செப்டம்பர் 21) கவுண்டர்கள் திறக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 2,000 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.


லக்னோ-புது டெல்லி வழி தேஜாஸில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 749 முன்பதிவுகள் இருந்ததாகவும், திரும்பும் பயணத்திற்கு நவம்பர் 20 வரை மொத்தம் 1,549 முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் ஜீ மீடியாவிடம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான முன்பதிவுகள் அக்டோபர் 23 முதல் அக்டோபர் 26 வரை உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்பது அதன் துணை நிறுவனமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் முழுமையாக இயக்கப்படும் இந்திய ரயில்வேயின் முதல் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.