உலகின் நம்பர் 1 ஆடம்பர ரக எலக்ட்ரிக் கார் நிறுவனம் இந்தியாவில் தனது தொழில்சாலையை அமைப்பது குறித்து நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை கர்நாடகாவில் அமைக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெஸ்லா நிறுவனத்தின் கார் ஆலையை தங்களது பக்கம் இழுப்பதற்கு, தமிழகம், கர்நாடாக, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இடையே கடும் போட்டா போட்டி நிலவியது.


கர்நாடகாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் (ELectric Vehicle) தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்த எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா தனது உற்பத்தி பிரிவை கர்நாடகாவில் அமைக்கும் என்று மாநில முதல்வர் பி எஸ் யெடியுரப்பா (B.S.Yediyurappa ) சனிக்கிழமை தெரிவித்தார்.


"அமெரிக்க நிறுவனமான டெஸ்லா (Tesla) கார் உற்பத்தி பிரிவை கர்நாடகாவில் அமைக்கும்" என்று முதல்வர் கூறினார்.


2021-22 ஆம் ஆண்டில், மாநிலத்தில் ரூ .1.16 கோடி செலவில் உள்கட்டமைப்பு மேம்பாடு நடைபெறும் என்றும், மெட்ரோ ரயில் பணிகளின் இரண்டாம் கட்டத்திற்கு ரூ .14,788 கோடி ஒதுக்கப்படும் எனவும் கர்நாடக முதல்வர் மேலும் தெரிவித்தார்


தும்குருவில் ரூ .7,725 கோடி முதலீட்டில் 2.8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கும் தொழில்துறை காரிடார் ஒன்று உருவாக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.


சமீபத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பாராட்டிய முதலவர் யடியூரப்பா, 2025 ஆம் ஆண்டில் ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பொருளாதாரம் மேம்பட வழி வகுக்கும் என்று கூறினார்.


டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. வருங்கால சந்தையில் எலக்ட்ரிக் கார்களுக்கு முக்கிய இடம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்று சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை காரணமாக உலகில் பல நாடுகள் எலக்டிரிக் வாகனங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன.


ALSO READ | இந்தியா வருகிறது Elon Musk-ன் Tesla: Bengaluru-வில் துணை நிறுவனம் பதிவு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR