செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னணு கட்டண வசூலை நாட்டில் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் கமர்ஷியல்  வாகனங்களுக்கு  அமல்படுத்தப்படும். அதன் பிறகு, தனியார் கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்களுக்கும் இந்த தொழில்நுட்பம் படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்த குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தை (Global Navigation Satellite System - GNSS) அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நிறுவ திட்டமிடப்பட்டு வருகிறது. இத்துடன் டோல் பிளாசா, ஃபாஸ்டாக் நடைமுறைகள் இருககது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய தொழில்நுட்பத்தால், சுங்கச்சாவடியில் ஏற்படும் நெரிசலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த தொழில்நுட்பத்தின் கீழ், பயனாளர்கள் தாங்கள் பயணிக்க வேண்டிய தூரத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். GNSS அடிப்படையிலான டோல் அமைப்பு தடையற்ற மின்னணு கட்டண வசூல் ஆகும். இதில் வாகனம் பயணித்த கிலோமீட்டர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வாகனத்தின் இயக்கம் கண்காணிக்கப்படும்.


சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்தியாவில் ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் முறையை செயல்படுத்த உலக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஜிஎன்எஸ்எஸ் வாகனங்களை அடையாளம் காண இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜிஎன்எஸ்எஸ் பாதைகள் இருக்கும். GNSS பாதையில் நுழையும் GNSS அல்லாத வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். 


மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!


முதல் மூன்று மாதங்களில் 2,000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளில் ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான கட்டண முறை அமல்படுத்தப்படும். இதன்பிறகு,  இந்த தொழில்நுட்பத்தின் கீழான கட்டண வசூல், அடுத்த 9 மாதங்களில் 10,000 கி.மீ ஆகவும், 25,000 கி.மீ நெடுஞ்சாலையாகவும், 15 மாதங்களில் 50,000 கி.மீ ஆகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தற்போது டோல் கட்டண வசூல் செய்ய Fastag அமைப்பு இந்தியாவில் உள்ளது. இதில் எலக்ட்ரானிக் டோல் சேகரிப்பு ரேடியோ அலைவரிசை அடையாள (RFID) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது 2015ம் ஆண்டு Fastag வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.


சில நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சில நேரங்களில் மக்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் சிக்கிக் கொண்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலை ஏற்படுகிறது என்று கூறியிருந்தார். இதை சமாளிக்க அரசு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது என்றும் செயற்கைக்கோள் கட்டண முறை விரைவில் தொடங்கப்படும் எனவும் கூறினார். இது பெங்களூர், மைசூர் மற்றும் பானிபட் ஆகிய இடங்களில் முன்னோடி திட்டமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வருடமே நாட்டில் இந்த கட்டண முறை தொடங்கப்படும் என்று நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | ரூ.150 இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்! இந்தியாவில் 22 ரூட் இருக்குது..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ