முழு நாட்டிலும் நடந்து வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் தற்போது ரயில்வே துறையில் எதிரொலிக்க துவங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் பயணிகளின் வருவாயில் ரூ.155 கோடியும், சரக்கு போக்குவரத்து வருவாயில் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 


ஊடக அறிக்கையின்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச்சில் வசிக்கும் சந்திரசேகர் கவுரின் தகவல் அறியும் பதிலுக்கு கிடைத்த தகவல்களின்படி, ரயில்வே துறை 2019-20 முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) பயணிகள் கட்டணத்திலிருந்து ரூ.13,398.92 கோடியை ஈட்டியுள்ளது. 


அதே வேளையில் இரண்டாவது நிதியாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இது 155 கோடி குறைந்து 13,243.81-ஆக இருந்தது. மறுபுறம், சரக்கு போக்குவரத்து முதல் காலாண்டில் ரூ.29,066.92 ஈட்டியுள்ளது, இது இரண்டாவது காலாண்டில் 3,901 கோடி குறைந்து 25,165.13 கோடியாக உள்ளது.


சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை), இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் டிக்கெட் முன்பதிவும் 1.27 சதவீதம் குறைந்துள்ளது. அதே வேளையில் புறநகர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் 1.13 சதவீதம் குறைவு பதிவு செய்யப்பட்டுள்ளது.