கொரோனா பரவுதல் அச்சத்திற்கு மத்தியில் முழு அடைப்பை மெதுவாக விலக்குமாறு FICCI (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகளின் கூட்டமைப்பு) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் ஆபத்து நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், எல்லோருடைய மனதிலும் உள்ள கேள்வி என்னவென்றால், கொரோனாவின் பரவுதல் காரணமாக நாடு முழுவதும் பூட்டுதல் எவ்வளவு காலம் தொடரும்? என்பது தான். தற்போது நடைமுறையில் உள்ள 21 நாள் முழுஅடைப்பு நான்கு நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. இந்நிலையில் முழு அடைப்பை மெதுவாக திறக்குமாறு FICCI அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 


என்றபோதிலும் IT நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட வேண்டும் என்றும் FICCI வேண்டுகோள் விடுத்துள்ளது.


அதாவது நாட்டில் முழு அடைப்பு படிப்படியாக திறக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு FICCI பரிந்துரைத்துள்ளது. மேலும், ஏப்ரல் 15 முதல் தொழிலாளர்களை வேலைக்கு அழைக்க வேண்டும், தொழிலாளர்கள் வேலைக்கு வர ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 


கொரோனா இல்லாத மாவட்டங்களில் பூட்டுதல் அகற்றப்பட வேண்டும் எனவும், சில்லறை கடைகளை ஓரளவு திறக்க வேண்டும் எனவும் FICCI பரிந்துரைத்துள்ளது. பகுதி இ-காமர்ஸ் மற்றும் உள்நாட்டு விமானங்களையும் அனுமதிக்குமாறு முறையீடு செய்யப்பட்டுள்ளது.


பொதுவான சாலை போக்குவரத்தை விதிகளுடன் அனுமதிக்க வேண்டும் என்று FICCI கூறியது. ரயில்வே சேவையையும் ஓரளவு தொடங்க FICCI ஒரு முக்கியமான திட்டத்தை முன்வைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பள்ளிகளில் முழு அடைப்பு தொடரப்பட வேண்டும் என்று FICCI கூறுகிறது. அதேவேளையில் நாட்டின் பெரிய ஹோட்டல்களில் பூட்டுதல் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் FICCI குறிப்பிட்டுள்ளது.