குறைவான வட்டியில் வீட்டு கடன் வழங்கும் வங்கிகள்!
CIBIL ஸ்கோர், பாலினம் மற்றும் கடனின் அளவு போன்றவற்றை பொறுத்து வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மாறுபடும்.
பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவங்கள் வீட்டு கடன்களுக்கு பல்வேறு விதமான வட்டி சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் வீட்டு விற்பனை மற்றும் சொத்துக்களின் பதிவு போன்ற செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. வீடுகளை வாங்கவோ அல்லது கட்டவோ பலரும் நிதி தேவைக்காக வங்கிகளில் கடன்களை வாங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படும் கடன்கள் பாலினம் மற்றும் கடனின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மாறுபடலாம், இது வங்கிக்கு வங்கி மாறுபடு அடையலாம். ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பல்வேறு கடன் வழங்குநர்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றி இங்கே காண்போம்.
மேலும் படிக்க | ஆன்லைனில் PF கணக்கின் இருப்பை சரிபார்ப்பது எப்படி?
இந்தியாவின் மிகப்பெரிய அடமான கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சியானது , ஹெச்டிஎஃப்சி வங்கியாக இணைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு 7.15 - 8.05 வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. CIBIL மதிப்பெண் , பாலினம் மற்றும் கடனின் அளவு போன்ற கடன் வாங்குபவர்களின் சுயவிவரத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் அளவுகள் மாறுபடும். சிறந்த CIBIL ஸ்கோர் இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தைப் பெறலாம். அதோடு நாம் வாங்கக்கூடிய கடன் தொகை அதிகமாக இருந்தால், வட்டி விகிதங்களும் அதிகமாக இருக்கும்.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்களுக்கு 7-7.6 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. பாலினத்தைத் தவிர, வங்கியில் உள்ள சொத்துக்களுக்கும் தனி வட்டி விகிதங்கள் உள்ளன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது பாலினம் தவிர சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சம்பளம் பெறாதவர்களைப் பொறுத்து 6.9-8.6 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் துறை கடனாளியான கோடக் மஹிந்திரா வங்கி வீட்டுக் கடன்களுக்கு 6.55-7.6 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் தவிர, ஜிஎஸ்டி மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது, இது சுமார் 0.5 சதவீதமாக இருக்கலாம்.
உயர் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில விகிதங்களை உயர்த்தியுள்ளதால், கடன் வழங்குபவர்கள் டெபாசிட் மற்றும் கடன் ஆகிய இரண்டிற்கும் வட்டி விகிதத்தை சமீபத்தில் உயர்த்தியுள்ளனர். ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான CBRE சவுத் ஏசியாவின் அறிக்கையின்படி, மார்ச் 2022 காலாண்டில் வீடு விற்பனை கிட்டத்தட்ட 13 சதவீதம் உயர்ந்து, காலாண்டில் 70,000 யூனிட்டுகளுக்கு மேல் உயர்ந்துள்ளது மற்றும் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற சில டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR