EPFO Update: இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. அலுவலக பணிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனங்களும் அதே அளவு தொகையை ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளில் டெபாசிட் செய்கின்றன. அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அனைத்து இபிஎஃப் கணக்குகளும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் EPFO ஆல் வகுக்கப்பட்டுள்ள சில விதிகளை பின்பற்ற வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப்ஓ அவ்வப்போது பிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) வசதிக்காக இபிஎஃப் விதிகளில் மாற்றங்களை செய்கிறது, புதுப்பித்தல்களை கொடுக்கிறது. இவற்றை இபிஎஃப் உறுப்பினர்கள் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும். EPFO ​இப்போது சில பிஎஃப் உறுப்பினர்களுக்கு பெரிய ஒரு நிவாரணத்தை அளித்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 
 
கூட்டு அறிவிப்பு படிவத்தை (Joint Declaration Form) நிரப்புவதில் இருந்து சில இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) EPFO ​​விலக்கு அளித்துள்ளது. பொதுவாக, 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் தங்கள் பங்கைப் பெற, அவர்களது நிறுவனம் சார்பில் அல்லது  முதலாளி கையொப்பமிடப்பட்ட கடிதத்தை EPFO ​​க்கு சமர்ப்பிக்க வேண்டும். எனினும், தற்போது EPFO ​​சில PF சந்தாதாரர்களுக்கு கூட்டு அறிவிப்பு படிவத்தை நிரப்புவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜனவரி மாதத்தில் EPFO ​​ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதை பற்றி தெரிந்துகொள்ளலாம். 


அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இது பொருந்தாது


ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தவர்களுக்கு இந்த விலக்கு கிடைக்காது என்று EPFO ​​தனது சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த EPS உறுப்பினர்கள் அனைவரும் கூட்டு அறிவிப்பு படிவத்தை நிரப்ப வேண்டும்.


மேலும் படிக்க | DA, DR உயர்வு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோரின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?


யார் இந்த படிவத்தை நிரப்ப வேண்டாம்?  


இபிஎஃப்ஓ -வின் புதிய சுற்றறிக்கையின் படி, இந்த நபர்கள் கூட்டு அறிவிப்பு படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை:


- வேலையை விட்டு வெளியேறிய பணியாளர்கள் இதை நிரப்ப வேண்டாம்.
- ஊழியர் இறந்து அவரது பிஎஃப் கணக்கு இன்னும் அப்படியே இருந்தால், அவரது சார்பில் யாரும் இதை நிரப்ப வேண்டாம்


இந்த இரண்டு வகைகளிலும், ஸ்டாண்டர்ட் வரம்பான ரூ.15,000க்கு மேல் டெபாசிட் செய்து, வேலையை விட்டுவிட்ட அல்லது அக்டோபர் 31, 2023க்கு முன் ஊழியர் இறந்துவிட்ட கணக்குகள் சார்பில் படிவம் நிரப்பப்படுவதற்கு விலக்கு அளிக்கப்படும். ஆகையால் இந்த உறுப்பினர்கள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.


EPF இன் தற்போதைய உறுப்பினர்களில், நிலையான வரம்பை விட அதிகமாகச் செலுத்தி, அது தொடர்பான நிர்வாகக் கட்டணங்களை அவர்களின் முதலாளி / நிறுவனம் செலுத்தும் வகையில் உள்ள இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் படிவத்தை நிரப்புவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.


மேலும் படிக்க | ஏழைகள் கூட ‘இந்த’ கார்களை வாங்கலாமாம்! மிஸ் பண்ணிடாதீங்க..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ