Post Office Scheme: தபால் அலுவலகத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. உண்மையில், பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் வருமானம் நன்றாக இருக்கிறது. ஆனால், நீங்கள் செய்திருக்கும் முதலீட்டுக்கும் ஆபத்து அதிகம். இதனால் பலர் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து எந்த ஆபத்தும் இல்லாமல், நல்ல வருமானத்தைப் பெற வேண்டும் என்றால், போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு திட்டம் சிறந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ.100-ல் ஆரம்பிக்கலாம்


அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டத் தொடர் வைப்புத் திட்டத்தில் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். முதலீடு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. உங்கள் வசதிக்கேற்ப ஒரு வருடம், இரண்டு வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக தொடர் வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில், தபால் துறையும் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி செலுத்துகிறது.


கடனும் எடுக்கலாம்


தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் எவரும் தனது கணக்கைத் தொடங்கலாம். ஒரு பெற்றோர் தனது மைனர் குழந்தைக்கு ஒரு கணக்கைத் திறக்கலாம். இந்த அஞ்சலக திட்டத்தில் கடனும் பெறலாம். கடனைப் பெற, உங்கள் தபால் நிலையக் கிளையை அணுக வேண்டும். இந்தக் கடனை 12 தவணைகளிலும் டெபாசிட் செய்யலாம். உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50% கடனாகப் பெறலாம்.


16 லட்சம் பெறுவது எப்படி?


ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.16,000 தொகையை முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.26 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 16,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பிறகு ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்வீர்கள். அதேபோல், இந்தத் திட்டத்தில் 10 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 19,20,000 ரூபாயை முதலீடாக வைப்பீர்கள். இதற்குப் பிறகு, திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு, நீங்கள் 6,82,359 ரூபாயைப் பெறுவீர்கள். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.26,02,359 கிடைக்கும். ரெக்கரிங் டெபாசிட்களில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.


மேலும் படிக்க | IRCTC Rule: பெர்த் தேர்வில் புதிய ஐஆர்சிடிசியின் புதிய விதிமுறைகள்


மேலும் படிக்க | அமேசான் - பிளிப்கார்ட்டை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ