ஊழியர்களுக்கு அருமையான அறிவிப்பு... ஓய்வூதியம் வரம்பை குறைத்த மாநில அரசு!
Pension Scheme: இந்த மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டியிருந்த நிலையில், அந்த வரம்பு தற்போது 25 வருடங்கள் என குறைக்கப்பட்டுள்ளது.
Pension Scheme: ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் தங்களின் 25 வருட சேவையை நிறைவுசெய்து, ஓய்வு பெற்ற பிறகுதான் முழு ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு 28 ஆண்டுகளாக இருந்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நேற்றிரவு (ஜூன் 6) நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்மூலம், இந்தச் செய்தி மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தியாக வந்துள்ளதுடன், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதன் பலனை பெறுவார்கள். ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 25 ஆண்டுகள் பணி முடித்தவுடன் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும் படிக்க | Aadhaar Card: அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆதார் கார்டில் இந்த வேலையை முடிச்சுருங்க!
10% கூடுதல் ஓய்வூதியம்
ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1996இல் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அசோக் கெலாட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், 28 ஆண்டுகள் தேவைப்படும் சேவைக்குப் பதிலாக, 25 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர்கள் முழு ஓய்வூதிய பலனைப் பெற முடியும். இது தவிர, 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் அமல்
ஒரு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் இறந்தால், அவரது திருமணமான ஊனமுற்ற மகன்/மகள் மாதம் ரூ.12,500 வரை சம்பாதிக்கும் தகுதியுள்ள உறுப்பினர்களும் குடும்ப ஓய்வூதியத்தின் பலனைப் பெற முடியும். இந்தத் திருத்தத்தின் அறிவிப்பு கடந்த ஏப். 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
சிறப்பு ஊதியமும் உயர்வு
ஊழியர்களின் நலன் கருதி பதவி உயர்வு, ஓய்வூதியம், சிறப்பு ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் (திருத்தப்பட்ட ஊதியம்) விதிகள், 2017-ஐ திருத்துவதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பணியாளர்களின் சிறப்பு ஊதியத்தை அதிகரிக்கும். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த நிதியாண்டின் பட்ஜெட்டில் இதை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீர் குர்ஜார் விகாஸ் மற்றும் அறக்கட்டளை, பில்வாரா மற்றும் ரேகர் சமாஜ், பிகானேர் ஆகிய நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான திட்டத்திற்கும் கெலாட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், தௌசா மருத்துவக் கல்லூரியின் பெயரை 'பண்டிட் நேவல் கிஷோர் சர்மா மருத்துவக் கல்லூரி தௌசா' என மாற்றும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ