மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை என்பது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதலீட்டு திட்டங்கள். இவை மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் அவற்றில் முதலீடு செய்யும் போது வட்டி விகிதம் உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்வதும் அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறந்த முதலீட்டை தேர்ந்தெடுக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை


முதலாவதாக, மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகையின் வருமானத்தை தீர்மானிப்பதில் வட்டி விகிதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக, இந்த வைப்புத்தொகைகள் வழக்கமான நிலையான வைப்புத்தொகைகளுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. நிலையான வருமானம் தேடும் ஓய்வு பெற்றவர்களுக்கு இது ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக அமைகிறது. 


மூத்த குடிமக்களுக்கான திட்டங்களின் வட்டி விகிதங்கள் 


மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த Bankbazaar.com இன் CEO அதிர் ஷெட்டி, “வழக்கமான FD முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, மூத்த குடிமக்கள் பொதுவாக தங்கள் FD முதலீடுகளுக்கு 0.50% கூடுதல் வட்டியைப் பெறுகிறார்கள். இது மொத்த வருவாயில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் ஓய்வு பெற்ற நபர்களுக்கு (Investment Tips) இது வரப்பிரசாதமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு வழக்கமான FD முதலீட்டிற்கு, 5 ஆண்டு காலத்திற்கு 6% வட்டி என எடுத்துக் கொண்டால், மூத்த குடிமக்கள் FD அதே காலத்திற்கு 6.50% வட்டியை வழங்கலாம்.


நிலையான வைப்புத்தொகையின் காலம்


கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் நிலையான வைப்புத்தொகையின் காலம். மூத்த குடிமக்கள் தங்கள் நிதி இலக்குகள் மற்றும் பணப்புழக்கத் தேவைகளுடன் ஒத்துப்போகும் வலையிலான முதலீட்டு காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். குறுகிய கால முதலீடுகள், நெகிழ்வுத்தன்மையை வழங்கலாம். ஆனால், அதே சமயம் நீண்ட கால முதலீடுகளில் அதிக வட்டி கிடைக்கும்.


முதலீடுகள் காரணமாக ஏற்படும் வரி தாக்கங்கள்


நிலையான வைப்புத்தொகையில் பெறப்படும் வட்டி பொதுவாக வரிக்கு உட்பட்டது என்றாலும், மூத்த குடிமக்கள் அதிக விலக்கு வரம்புக்கு தகுதியுடையவர்கள். முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது வரி விதிகளைப் பற்றி அறிந்திருப்பதும், வரிகள் கழிக்கப்பட்ட பின் கிடைக்கும் பிந்தைய வருமானத்தைக் கருத்தில் கொள்வதும் நல்லது.


மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் வட்டி விகிதங்கள் தொடர்பாக ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் என்ன?


பணப்புழக்கம் மற்றும் அவசரத் தேவை


பணப்புழக்கம் ஒரு முக்கியமான காரணியாகும், குறிப்பாக வயது அதிகமாக அதிகமாக, மருத்துவ அவசரநிலை அல்லது பிற எதிர்பாராத செலவுகளுக்கு நிதி தேவைப்படும். வருமானம் மற்றும் பணப்புழக்கம் ஆகிய இரண்டையும் உறுதி செய்வதற்கான ஒரு விவேகமான தேர்வாக, முதலீட்டு காலத்தின் முடிவில் வட்டி மற்றும் முதிர்ச்சியைக் கூட்டும் நிலையான வைப்புத்தொகையைத் தேர்ந்தெடுப்பது.


முதலீட்டு உத்தியை மறுமதிப்பீடு செய்வது அவசியம்


கடைசியாக, முதலீட்டு உத்தியை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து மறுமதிப்பீடு செய்வது அவசியம். பொருளாதார நிலைமைகள் மற்றும் வட்டி விகித சூழ்நிலைகள் மாறலாம். இவை நிலையான வைப்பு தொகைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை பாதிக்கலாம். முதலீட்டு போர்ட்ஃபோலியோவைத் தொடர்ந்து கண்காணித்து, மாற்றங்களைச் செய்வது மூத்த குடிமக்கள் வருமானத்தை மேம்படுத்தவும், ஓய்வுக்குப் பிறகு அவர்களின் நிதி நலனைப் பாதுகாக்கவும் உதவும்.


சிறு நிதி வங்கிகள்


பொதுவாகவே, சிறு நிதி வங்கிகள் FDக்கு அதிக வட்டி விகிதங்களை (Small Finance Bank FD Interest Rate)வழங்குகின்றன. சூருயோதய் சிறு நிதி வங்கி (Suryodhay Small Finance Bank) 2 வருட காத்திற்கான மூத்த குடிமக்கள் எஃப்டிக்கு 9.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதே சமயம் எஸ்பிஐ, இந்தியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற சில பெரிய வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு FD மீது சிறந்த வட்டியை வழங்குகின்றன (senior citizen FD rates) என்பது குறிப்பிடத்தக்கது. 


மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக திட்டம்


வங்கிகளை தவிர அரசின் சில திட்டங்களும் மூத்த குடிமக்களுக்கு நலல வருமானத்தை வருகின்றன. அஞ்சலகத்தின் சிறுசேமிப்புத் திட்டங்களின் கீழ் பல சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இதில் மூத்த குடிமக்களுக்காக அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறப்பான ஒரு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme). இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் 8.2 சதவீதம் வட்டி தருகிறது. அரசின் திட்டம் என்பதால், பண இழப்பு ஏற்படும் அபாயம் இல்லை. இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் வட்டி விகிதத்தின் பலனைப் பெறத் தொடங்குவீர்கள்.


மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கறீங்களா... ‘இந்த’ கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையா இருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ