நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வசதியாகவும், எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்ய புதிய விதிகள் மற்றும் கொள்கைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், போலி செய்திகள் அல்லது அழைப்புகள் மூலம் மோசடி செய்வதும் அதிகரித்துள்ளது. பரிவர்த்தனைகளைச் செய்யும்போது எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் தற்போது போலி அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் செய்திகளின் மூலம் மோசடி வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இணைய குற்றங்களுக்கு பலர் பலியாகி வருகின்றனர். அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் மோசடி செய்வது அதிகரித்துள்ளது. ஒரு சிறிய தவறு மற்றும் நீங்கள் கடினமாக சேமித்த பணத்தை இழக்க நேரிடும். போலி அழைப்புகள் மற்றும் செய்திகளைக் கண்டறிவது மிகவும் கடினமாகிவிட்டது. ஏனெனில் மோசடி செய்பவர்கள் உங்களுக்கு OTP வழங்குவதற்கு அல்லது பரிவர்த்தனை செய்வதற்கு பல்வேறு நூதனமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். பணப் பரிவர்த்தனை தொடர்பான செய்தி உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிப்பட்ட எண்ணில் இருந்து வரும் மெஸ்சேஜ்


தெரியாத மொபைல் எண்ணிலிருந்து உங்களுக்கு தகவல் அல்லது மெஸ்சேஜ் வந்தால் வந்தால், போலிச் செய்தியை அடையாளம் காண்பதற்கான முதல் மற்றும் எளிதான வழி அதனை மிக எச்சரிக்கையாக பார்ப்பது. தெரியாத எண்ணில் இருந்து வங்கிகள் எனக் கூறிக் கொண்டு வரும் மெஸ்சேஜ் மோசடியின் அறிகுறியாக இருப்பதால், உடனடியாக அதனை நீக்குவது நல்லது. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஏதேனும் ஒரு வங்கி உங்களுக்கு செய்தி அனுப்பினால், உதாரணத்திற்கு VM- ICICI Bank, AD- ICICIBN, JD- ICICIBK என்ற வகையில் தான் எஸ் எம் எஸ் தோன்றும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். செய்திகள் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்ள எந்த வங்கியும் தனிப்பட்ட எண்ணைப் பயன்படுத்தாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட எண்ணிலிருந்து வரும் எந்த செய்தியும் மோசடி செய்தியாக இருக்கலாம்.


மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் இவ்வளவு பணம்தான் இருக்கலாம்: மீறினால் வருமான வரி நோட்டீஸ் வரும்


 எழுத்துப் பிழைகள் நிறைந்த எஸ் எம் எஸ்


மற்றொரு எச்சரிக்கை அறிகுறி என்னவென்றால், மோசடி செய்பவர்கள் இலக்கணம் அல்லது அவர்கள் எழுதும் விதத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. எந்தச் செய்தியையும் கவனமாகப் படியுங்கள். ஏதேனும் தவறு இருந்தால், அத்தகைய செய்திக்கு பதிலளிக்க வேண்டாம். போலிச் செய்திகளில் பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் அல்லது பெரிய எழுத்துகளைப் பயன்படுத்துகின்றன. வங்கியின் செய்தியில் மொழி அல்லது இலக்கணம் தொடர்பான தவறு எதுவும் இருக்கவே இருக்காது.


இலவசப் பரிசு குறித்த எஸ் எம் எஸ்கள்


உங்களுக்கு இலவசப் பரிசை வழங்குவதாகச் செய்திகள் வந்தால், அதைப் புறக்கணித்து, எந்தச் சூழ்நிலையிலும் அதற்குப் பதிலளிக்க வேண்டாம். வங்கி உங்களுக்கு எந்த இலவச பரிசும் வழங்காது என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். லாட்டரியை வென்றது அல்லது உங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்வது பற்றிய செய்தி வந்தாலும், அதைப் புறக்கணிக்கவும். மோசடி செய்பவர்கள் உங்களை கவர்ந்திழுக்க இது போன்ற தகவல்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலும் இதுபோன்ற செய்திகளில் இணைய முகவரிக்கான லிங்குகளும் இருக்கும். அவற்றைக் கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் அது உங்களை ஒரு மோசடி தளத்திற்கு திருப்பிவிடும்.


மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு சூப்பர் செய்தி, வருமானம் வந்தாலும் வரி செலுத்த வேண்டாம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ