வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... ‘இந்த’ வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை குறைக்க ரயில்வே திட்டம்..!!
வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதிவேக ரயில்களின் வேகத்தைக் குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதிவேக ரயில்களின் வேகத்தைக் குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
சில வழித்தடங்களில் ரயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பு (TPWS) தோல்வி அடையும் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிடு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில்களின் வேகம் மணிக்கு 160 கிமீயில் இருந்து 130 கிமீ ஆக குறையும் என கூறப்படுகிறது.
வேகத்தைக் குறைக்க குறைந்தது 10 பிற பிரீமியம் ரயில்களின் நேர மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. தில்லி-கான்பூர் செக்டார் போன்ற குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர, பெரும்பாலான வழித்தடங்களில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express) ஏற்கனவே மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. தில்லி-கான்பூர் உள்ள வழித்தடங்கள் மணிக்கு 160 கிமீ வேகத்தை ஆதரிக்கும் திறன் கொண்டவை.
நவம்பர் 6, 2023 அன்று வடக்கு ரயில்வே வேகத்தை 130 கிமீ வேகத்தில் குறைக்க முன்மொழிந்ததாக ஊடக அறிக்கைகள் வெளியாகின. ஆனால் அந்த முன்மொழிவு ரயில்வே வாரியத்திடம் நிலுவையில் உள்ளது. இருப்பினும், சமீபத்திய காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தைத் தொடர்ந்து, இந்த வேகக் குறைப்பின் அவசியத்தை வலியுறுத்தி ஜூன் 25, 2024 அன்று புதுப்பிக்கப்பட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
டெல்லி-ஆக்ரா-ஜான்சி வழித்தடங்களில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகளின் தோல்விகளை தடுக்கும் வகையில் வேகத்தில் சீர் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது என்று ஒரு மூத்த ரயில்வே அதிகாரி விளக்கினார். இந்த மாற்றம் குறைந்தது 10 மற்ற அதிவிரைவு விரைவு ரயில்களின் கால அட்டவணையை பாதிக்கும். அவற்றின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
வேகத்தைக் குறைப்பதற்கான பரிந்துரையை வட மத்திய ரயில்வே ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்தது. அது குறிப்பாக ரயில் எண் 12050/12049 டெல்லி-ஜான்சி-டெல்லி கதிமான் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22470/22469 டெல்லி-கஜுராஹோ-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 20172/20171 டெல்லி-ராணி கமலாபதி-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 12002/12001 டெல்லி-ராணி கமலாபதி-டெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் வேகத்தை குறைக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ICF தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வடிவமைப்பாளர், இந்த முடிவை விமர்சித்தார்.
TPWS தோல்வியின் காரணமாக பிரீமியம் ரயில்களின் வேகத்தைக் குறைப்பது பாதுகாப்புப் பிரச்சினைகளை தீர்க்காது என்று அவர் வாதிட்டார். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்திற்கு காரணமான சரக்கு ரயில் 45 கிலோமீட்டர் என்னும் குறைவான வேகத்தில் சென்றதை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் வேகத்தைக் குறைப்பது எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
செமி-அதிவேக ரயில்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டதாகவும், அடிப்படைப் பாதுகாப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் அவற்றின் வேகத்தைக் குறைப்பது அவற்றின் செயலை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சுப்ரான்ஷு வலியுறுத்தினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ